Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கு ஏன் போக வேண்டும்?

ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கு ஏன் போக வேண்டும்?

 யெகோவாவின் சாட்சிகள் கடவுளை வணங்குவதற்காகக் கூடிவரும் இடத்தின் பெயர்தான் ராஜ்ய மன்றம். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே கூட்டங்கள் நடக்கும். கூட்டங்களில் என்ன நடக்கும்? அதில் கலந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

 ராஜ்ய மன்றத்தில் என்ன நடக்கும்?

 நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பைபிள் விஷயங்களைப் பற்றி ராஜ்ய மன்றத்தில் சொல்லித்தருவார்கள். நீங்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது . . .

  •   கடவுளைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள்.

  •   இன்றைக்கு இருக்கிற பிரச்சினைகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.

  •   ஒரு நல்ல நபராக ஆவீர்கள்.

  •   நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பீர்கள்.

 உங்களுக்குத் தெரியுமா? யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் நடக்கிற இடத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி, முக்கியமாகச் சொல்கிறார்கள். அதனால்தான் அதற்கு ராஜ்ய மன்றம் என்று பெயர்.—மத்தேயு 6:9, 10; 24:14; லூக்கா 4:43.

 கூட்டங்களில் ஏன் கலந்துகொள்ள வேண்டும்?

 பிரயோஜனமான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் பைபிள் ஆலோசனைகளைப் பற்றிக் கலந்துபேசுவார்கள். இது ‘ஞானத்தை சம்பாதிக்க’ உங்களுக்கு உதவும். (நீதிமொழிகள் 4:5) அதாவது, வாழ்க்கையில் நல்ல தீர்மானங்கள் எடுக்க பைபிள் உங்களுக்கு உதவும். வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். அவற்றில் சில கேள்விகள். . .

 வார இறுதி நாட்களில் நடக்கிற கூட்டங்களில் இதுபோன்ற தலைப்புகளில் பேச்சு கொடுப்பார்கள்:

  •   நாம் ஏன் பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?

  •   கஷ்ட காலங்களில் நமக்கு எங்கிருந்து உதவி கிடைக்கும்?

  •   கடவுளுடைய அரசாங்கம் இப்போது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறது?

 “என் கூடப்படிக்கிற பையன் ஒரு தடவை கூட்டத்துக்கு வந்திருந்தான். எங்க குடும்பத்தோட சேந்து அவன் உட்காந்தான். எங்ககிட்ட இருந்த புத்தகங்கள அவனுக்கு காட்டுனோம். கேள்வி-பதில் பகுதியில ஒவ்வொருத்தரும் சொன்ன பதில்கள் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததா சொன்னான். அவன் போற சர்ச்சுல இந்த மாதிரி எல்லாம் படிக்கிறதுக்கு எதுவும் இல்லன்னும் சொன்னான்.”—பிரென்டா.

 உங்களுக்குத் தெரியுமா? யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் காணிக்கை வசூலிக்கப்படாது. அனுமதி இலவசம்.

 எல்லாரோடும் பேசி மகிழ்வதால் உங்களுக்கு உற்சாகம் கிடைக்கும். கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வரவேண்டும் என்று பைபிள் சொல்வதற்கு ஒரு காரணம், அங்கே “ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த” முடியும். (எபிரெயர் 10:24, 25) சுயநலமான இந்த உலகத்தில் தங்களைவிட கடவுளையும், மற்றவர்களையும் அதிகமாக நேசிக்கிற ஜனங்களோடு பழகுவது மனதுக்கு இதமாக இருக்கும்.

 “சில நேரம் ஸ்கூல்ல இருந்து வர்றப்போ எனக்கு ரொம்ப சோர்வா இருக்கும். சுத்தமா தெம்பே இருக்காது. ஆனா, ராஜ்ய மன்றத்துக்கு போனாலே போதும், அங்க இருக்கிறவங்க என்னோட கவலையயெல்லாம் மறக்க வச்சிடுவாங்க. கூட்டம் முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அடுத்த நாள சமாளிக்க தயாராயிடுவேன்.”—எலிஸா.

 உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதும் 60,000-துக்கும் அதிகமான இடங்களில், 1,20,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இருக்கின்றன. கூட்டங்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போவதால், ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 1,500 ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுகின்றன. a

a கூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, “யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்கள்” என்ற பகுதிக்குப் போய் “பக்கத்தில் உள்ள இடத்தைக் கண்டுபிடியுங்கள்” என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.