Skip to content

நம்முடைய துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

நம்முடைய துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

பைபிள் தரும் பதில்

 இல்லவே இல்லை என்கிறது பைபிள்! மனிதர்கள் துன்பப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் யெகோவா தேவன் அவர்களைப் படைக்கவில்லை. அவருடைய ஆட்சிக்கு எதிராக முதல் மனிதத் தம்பதிதான் கலகம் செய்தார்கள், நல்லது கெட்டதைத் தாங்களே தீர்மானிக்க முடிவுசெய்தார்கள். கடவுளைவிட்டே விலகிப் போனார்கள், இதனால் துன்ப துயரங்களைச் சந்தித்தார்கள்.

 அவர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவுகளைத்தான் இன்று நாம் அனுபவித்துவருகிறோம். அப்படியானால், இன்றைய துனபங்களுக்குக் கடவுள் ஒருபோதும் காரணமல்ல.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.” (யாக்கோபு 1:13) யாருக்கு வேண்டுமானாலும் துன்பம் வரலாம்—ஏன் கடவுளுக்குப் பிரியமான நபர்களுக்குக்கூட வரலாம்.