Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா? (பகுதி 1)

நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா? (பகுதி 1)

 சிலசமயம், பிரிந்துபோவதும் ஒரு வரம் என்றே சொல்லலாம். ஜில் என்ற பெண்னின் அனுபவத்தைப் பாருங்கள்: “ஆரம்பத்தில் என்னுடைய பாய் ஃபிரெண்ட் நான் எங்கே இருக்கிறேன்... என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன்... யாருடன் இருக்கிறேன்... என்றெல்லாம் அடிக்கடி கேட்டது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அதுவே போகப்போக எனக்கு ரொம்ப தொல்லையாக போய்விட்டது. அவனுடன் மட்டும்தான் எப்போதும் இருக்க வேண்டும், வேறு யாருடனும் நேரம் செலவிடக்கூடாது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான். சிலசமயம், நான் என் குடும்பத்தோடு சேர்ந்து நேரம் செலவிடுவதை பார்த்த அவன் பொறாமைப்படுவான், அதுவும் முக்கியமாக என் அப்பாவுடன்! ஆனால், நாங்கள் பிரேக்-அப் செய்த பிறகு என் தோழில் இருந்த ஒரு பெரிய சுமையை கீழே இறக்கி வைத்ததுபோல் இருந்தது!”

 சாரா என்ற ஒரு பெண்ணுக்கும் இதே மாதிரிதான் நடந்தது. அவர் ஜான் என்ற ஒருவரை காதலித்துக்கொண்டு இருந்தார். ஆனால், போகப்போக ஜான் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்று தெரிய ஆரம்பித்தது. ஜான் ரொம்ப குத்தலாக பேசினார், அதிகாரம் பண்ணினார், சிலசமயம் கடுகடுவென்று நடந்துக்கொண்டார். சாரா இப்படி சொல்கிறார்: “ஒருசமயம், நாங்கள் வெளியே போக வேண்டி இருந்தது. அப்போது ஜான் ரொம்ப லேட்டாக வந்தார்; மூன்று மணிநேரம் லேட்டாக வந்தார்! அவர் வீட்டுக்கு வந்தபோது என்னுடைய அம்மாதான் கதவைத் திறந்தார். அம்மாவை அவர் கொஞ்சம்கூட மதிக்கவே இல்லை. ‘வா போகலாம், இப்போது போனால் லேட்டாகத்தான் போய் சேருவோம் போல’ என்று சொன்னார். அவர் வந்ததுதான் லேட்! ஆனால், லேட்டானதற்கு நாங்கள் இரண்டு பேருமே காரணம் என்பது போல பேசினார். முதலில், ஏன் லேட்டாக வந்தார் என்று சொல்லி இருக்க வேண்டும். அல்லது லேட்டாக வந்ததற்கு ஸாரி சொல்லியிருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக என் அம்மாவுக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்! ஆனால், இது எதையுமே அவர் செய்யவில்லை.”

 ஏதோ ஒருசமயம் மனதை கஷ்டப்படுத்திவிட்டார் அல்லது கோபப்பட்டுவிட்டார் என்பதற்காக உடனே பிரேக்-அப் செய்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. (சங்கீதம் 130:3) ஆனால், சாரா-ஜான் விஷயத்தில் ஜானுடைய சுபாவமே அப்படித்தான் என்பதை சாரா புரிந்துகொண்டார். அதனால், ஜானிடம் இருந்து பிரிந்துவிடலாம் என்று அவர் முடிவெடுத்தார்.

 ஜில், சாரா மாதிரியே நீங்கள் காதலிக்கிறவரும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்க மாட்டார் என்று தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் உணர்ச்சிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள்! அவருடன் பிரேக்-அப் செய்துகொள்வதுதான் சரி என்று உங்கள் மனதில் பட்டால், அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதைச் செய்ய தயங்காதீர்கள். ஏனென்றால், “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்” என்று நீதிமொழிகள் 22:3 சொல்கிறது.

 பிரேக்-அப் செய்வது அவ்வளவு ஈஸி இல்லைதான்! ஆனால், திருமணம் என்பது ஒரு நிரந்தரமான பந்தம். அதனால், வாழ்க்கை முழுவதும் ஒருவரை கட்டிக்கொண்டு அழுவதைவிட, கொஞ்சம் நாள் பிரேக்-அப்பின் வலியை தாங்கிக்கொள்வது எவ்வளவோ மேல்!