Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 2: பைபிள் வாசிப்பதை சுவாரஸ்யமானதாக ஆக்குங்கள்

பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 2: பைபிள் வாசிப்பதை சுவாரஸ்யமானதாக ஆக்குங்கள்

 “பைபிள சரியான விதத்துல வாசிக்கிறது எப்படினு தெரியலன்னா, அது உங்களுக்கு போர் அடிக்கிற மாதிரி தெரியும்” என்று டீனேஜ் பையன் வெல் சொல்கிறான்.

 பைபிளை எப்படி சுவாரஸ்யமாக வாசிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

 வசனங்களுக்கு உயிர் கொடுங்கள்!

 ரசித்து ருசித்து வாசியுங்கள். அதற்கு இந்த முறைகளைப் பயன்படுத்தலாம்.

  1.   ஒரு பைபிள் பதிவைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்குப் பிடித்த பைபிள் சம்பவத்தை அல்லது சுவிசேஷப் புத்தகத்திலிருந்து ஒரு பதிவை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால், jw.org-ல், உயிரோட்டமுள்ள பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து ஏதாவது ஒரு பதிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

  2.   அந்தப் பதிவை வாசியுங்கள். அதை நீங்கள் தனியாகவும் வாசிக்கலாம், நண்பர்கள் அல்லது குடும்பத்தாரோடு சேர்ந்து சத்தமாகவும் வாசிக்கலாம். அதில் இருக்கிற விவரிப்புகளை ஒருவரும், கதாபாத்திரங்களின் பாகங்களை மற்றவர்களும் வாசிக்கலாம்.

  3.   இந்த ஆலோசனைகளில் ஒன்றையோ சிலவற்றையோ பயன்படுத்திப் பாருங்கள்:

    •   அந்தப் பதிவை விளக்குவது போன்ற படங்களை வரையுங்கள். அல்லது அந்தப் பதிவுகளில் உள்ள சம்பவங்களை வரிசைப்படி, சின்ன சின்ன படங்களாக வரையுங்கள். ஒவ்வொரு படத்துக்குப் பக்கத்திலும் அதை விளக்கும் குறிப்புகளை எழுதி வையுங்கள்.

    •   விளக்க வரைபடங்களை வரையுங்கள். உதாரணத்துக்கு கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்த ஒருவரைப் பற்றி வாசிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய குணங்களையும், செயல்களையும் எழுதி, அதை அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தோடு பொருத்திக் காட்டுங்கள்.

    •   அந்தப் பதிவை ஒரு செய்தி அறிக்கையில் விவரிப்பது போல எழுதுங்கள். அந்த சம்பவத்தை வெவ்வேறு ஆட்களின் கண்ணோட்டத்தில் எழுதுங்கள். முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் கண்கண்ட சாட்சிகளின் “பேட்டிகளையும்” அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    •   தப்பான தீர்மானம் எடுத்த ஒரு பைபிள் கதாபாத்திரத்தைப் பற்றி வாசிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். உதாரணத்துக்கு, இயேசுவை யாரென்றே தெரியாது என்று பேதுரு சொன்ன பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். (மாற்கு 14:66-72) அந்த நெருக்கடியான சூழ்நிலையில் பேதுரு என்ன சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள்.

    •   இன்னும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அந்த பைபிள் பதிவை ஒரு நாடகமாக எழுதுங்கள். அந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் எழுதுங்கள்.—ரோமர் 15:4.

      பைபிள் பதிவுகளுக்கு உங்களால் உயிர் கொடுக்க முடியும்!

 அலசி ஆராயுங்கள்!

 நுணுக்கமான விவரங்களை அலசி ஆராய்ந்தீர்கள் என்றால், அந்தப் பதிவுகளில் மறைந்திருக்கிற முத்தான விஷயங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும். சிலசமயங்களில், ஓரிரு வார்த்தைகள் முக்கியமான தகவலைக் கண்டுபிடிக்க உதவும்.

 உதாரணத்துக்கு மத்தேயு 28:7-ஐ மாற்கு 16:7-டன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  •    சீஷர்களையும் ‘பேதுருவையும்’ சீக்கிரத்தில் இயேசு பார்ப்பார் என்ற விவரத்தை மாற்கு தன்னுடைய பதிவில் ஏன் சேர்த்துக்கொண்டார்?

  •  உதவிக் குறிப்பு: இந்தச் சம்பவங்களை மாற்கு நேரடியாகப் பார்க்கவில்லை. பேதுருவிடமிருந்து இந்த விஷயங்களை அவர் கேட்டுத் தெரிந்திருக்கலாம்.

  •  மறைந்திருக்கும் மணிக்கல்: தன்னைப் பார்க்க இயேசு ஆசைப்படுகிறார் என்பதைக் கேள்விப்பட்டது பேதுருவுக்கு ஏன் ஆறுதலாக இருந்திருக்கும்? (மாற்கு 14:66-72) இயேசு எப்படி பேதுருவுக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார்? இயேசுவைப் போல நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கலாம்?

 பைபிள் வசனங்களுக்கு உயிர் கொடுத்து, அதில் இருக்கிற நுணுக்கமான விவரங்களை அலசி ஆராயும்போது பைபிளை வாசிப்பது உங்களுக்கு ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும்.