Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா? (பகுதி 2)

நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா? (பகுதி 2)

 “நாம் பிரிந்துவிடலாம்” என்று சொல்வதற்கு ஒரு நல்ல சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். அதை நீங்கள் எப்படி செய்யலாம்?

 இந்த மாதிரி ஒரு விஷயத்தை மற்றவர்கள் உங்களிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்? (மத்தேயு 7:12) எல்லோர் முன்பாகவும் ஒரு அறிவிப்பு மாதிரி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்களா? கண்டிப்பாக அப்படி நினைக்க மாட்டீர்கள்.

 நீங்கள் பிரேக்-அப் செய்ய போகிறீர்கள் என்ற விஷயத்தை ஒரு மெசேஜ் வழியாகவோ வாய்ஸ் மெசேஜ் அல்லது ஈ-மெயில் வழியாகவோ சொல்லாதீர்கள். வேறு வழியே இல்லையென்றால் மட்டும் இப்படி சொல்லுங்கள். அதற்கு பதிலாக, இந்த முக்கியமான விஷயத்தை பற்றி பேசுவதற்கு ஒரு நல்ல நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுங்கள்.

 பேச வேண்டிய சமயம் வரும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவர்கள் எப்போதும் ஒருவரிடம் ஒருவர் ‘உண்மையை பேச’ வேண்டும் என்று பவுல் சொன்னார்.—எபேசியர் 4:25.

 யோசித்து கவனமாக பேசுங்கள். அதேசமயத்தில் உறுதியாகவும் இருங்கள். இது உங்களுக்கு ஏன் ‘செட்’ ஆகாது என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கள்.

 அவர் என்ன தவறு செய்தார், என்னென்ன பிரச்சினைகள் வந்தது என்றெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட் போடாதீர்கள். “நீங்கள் இதை செய்யவில்லை,” “நீங்கள் எப்போதுமே அதையெல்லாம் செய்வதில்லை” என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை காட்டும் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். “எனக்கு இப்படிப்பட்ட ஒருவர்தான் வேண்டும் . . .” அல்லது “நாம் பிரேக்-அப் செய்வது நல்லது என்று நான் ஏன் நினைக்கிறேன் என்றால் . . .” என்பது போல் பேசுங்கள்.

 மதில்மேல் பூனை மாதிரி இருப்பதற்கு இது நேரமல்ல. அதேபோல் விட்டு கொடுப்பதற்கும் இது நேரமல்ல. ஒரு முக்கியமான காரணத்திற்காகத்தான் நீங்கள் பிரேக்-அப் செய்துவிடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்! எப்படியாவது உங்கள் மனதை மாற்றுவதற்கு உங்களுடைய நண்பர் முயற்சி செய்யலாம். அதனால், நீங்கள் உறுதியாக இருங்கள். “நான் காதலித்து கொண்டிருந்தவர், பிரேக்-அப் செய்த பிறகு எல்லா சமயத்திலும் சோகமாக இருக்கிற மாதிரி காட்டிக்கொண்டார். அவரை பார்த்து நான் மனதை மாற்றிக்கொள்வதற்காக அப்படி செய்தார் என்று நினைக்கிறேன். அவரை பார்க்க எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அவர் நடந்துகொண்டதை பார்த்து என்னுடைய முடிவை நான் மாற்றிக்கொள்ளவில்லை” என்று லோரி என்கிற ஒரு இளம் பெண் சொல்கிறார். லோரி மாதிரியே தெளிவாக யோசியுங்கள். நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். நீங்கள் இல்லை என்று சொன்னது இல்லை என்றே இருக்கட்டும்.—யாக்கோபு 5:12.