Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

விளையாட்டுக் காதல்—ஆபத்தானதா?

விளையாட்டுக் காதல்—ஆபத்தானதா?

 காதலை வெளிப்படுத்துவது தவறா?

 ஒருவர்மேல் உங்களுக்கு காதல் வந்திருந்தால், உங்களுடைய உணர்வுகளை வார்த்தைகளாலும் செயல்களாலும் காட்டுவீர்கள். இப்படி செய்வது தவறா? தவறு என்று சொல்லிட முடியாது! ஆன் என்று ஒரு இளம் பெண் இப்படி சொல்கிறாள்: “உங்களுக்கு காதலிக்கிற வயது இருந்து, ஒருவர்மேல் உங்களுக்கு காதல் வந்தால், உங்களுக்கு அவர்மேல் காதல் இருக்கிறது என்பதை காட்டுவதில் தவறே இல்லை. அப்படிக் காட்டினால்தானே அவர்களுக்கும் நம்மேல் காதல் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.”

 ஆனால், சிலர் விளையாட்டுக்காக காதலிப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் ஜாலிக்காக அப்படி செய்கிறார்கள். அப்படிச் செய்வது சரியா? அதை பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

 ”உண்மையிலேயே ஒருவர்மேல் காதல் இருந்தால் அவர்களிடம் நெருங்கிப் பழகலாம். ஆனால், காதல் இல்லாமல் சும்மா விளையாட்டுக்காக நெருங்கி பழகிவிட்டு பிறகு திடீரென்று கழற்றிவிடுவது ரொம்ப மோசம். அவர்களுடைய மனது ரொம்பவே காயமாகிவிடும்.”—டியானா.

 சிலர் ஏன் விளையாட்டுக்காக காதலிக்கிறார்கள்?

 சிலர் ‘கெத்து’ காட்டுவதற்காக விளையாட்டுக்குக் காதல் செய்வதுபோல் நடந்துகொள்வார்கள். “நான்கு பேர் நம்மை ‘சைட்’ அடிக்கிறார்கள் என்று நினைக்கும்போது, அப்படியே வானத்தில் பறப்பதுபோல் இருக்கும். இன்னும் நிறைய பேர் நம்மை பார்க்க வேண்டும் என்று தோன்றும்” என்கிறாள் ஹெய்லி என்ற இளம் பெண்.

 கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லாமல் விளையாட்டுத்தனமாக காதலிப்பதுபோல் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், இன்னொருவருடைய மனதை நீங்கள் வேண்டுமென்றே காயப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு கொஞ்சம்கூட மனதில் ஈரமே இல்லை என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள். வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்கும் பக்குவம் உங்களுக்கு வரவில்லை என்று அது காட்டும். “புத்தியில்லாதவன் முட்டாள்தனமாக நடப்பதில் சந்தோஷப்படுகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 15:21.

 அதனால்தான் ஹெய்லி இப்படி சொல்கிறாள்: “விளையாட்டுக் காதல் ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், கடைசியில் விபரீதத்தில்தான் போய் முடியும்.”

 அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன?

  •   விளையாட்டுக் காதல்—பெயரைக் கெடுத்துவிடும்.

     “விளையாட்டுக்காக காதலிக்கிறவர்களை பார்த்தால் முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்று தோன்றும். நேர்மையாக இல்லாமல் ஏதோ ஒன்று வேண்டும் என்பதற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்று தோன்றும்.”—ஜெரமி.

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.

     யோசித்துப்பாருங்கள்: என்ன மாதிரியான வார்த்தைகளும் செயல்களும் நாம் சும்மா விளையாட்டாக காதலிக்கிறேன் என்று மற்றவர்களை நினைக்க வைக்கும்?

  •   விளையாட்டுக் காதல்—மனதைக் காயப்படுத்திவிடும்.

     “விளையாட்டுக்காக காதலிக்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்களோடு பழகவும் பிடிக்காது. நான் பெண் என்ற ஒரே காரணத்தினால்தான் அவர்கள் என்னிடம் பேசி பழகுகிற மாதிரி எனக்கு தோன்றும். அப்படிச் செய்கிறவர்களுக்கு உண்மையிலேயே என்மேல் அக்கறை எல்லாம் கிடையாது. அவர்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காகத்தான் அப்படி செய்கிறார்கள்.”—ஜாக்லின்.

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

     யோசித்துப்பாருங்கள்: உங்கள்மேல் காதல் இருப்பது போல் ஒருவர் உங்களிடம் பழகிவிட்டு அதற்கு பிறகு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரா? அப்போது உங்கள் மனதுக்கு எப்படி இருந்தது? அவரைப் போலவே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றிவிடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?

  •   விளையாட்டுக் காதல்—உண்மைக் காதலை கண்டுபிடிக்க முடியாதபடி செய்துவிடும்.

     ”சும்மா விளையாட்டுக்காக காதலிக்கிற ஒருவர்மேல் ஆசையே வராது. அவரை கல்யாணம் பண்ண வேண்டும் என்றும் தோன்றாது. அந்த மாதிரி ஒருவரை எப்படி நம்ப முடியும்?“—ஒலிவியா.

     பைபிளில் சங்கீதங்களை எழுதிய தாவீது இப்படி சொன்னார்: “வெளிவேஷம் போடுகிறவர்களோடு [நான்] சேருவதில்லை.”—சங்கீதம் 26:4.

     யோசித்துப்பாருங்கள்: விளையாட்டுக்காக காதலிக்கிற ஒருவரை யாருக்காவது பிடிக்குமா? உங்களுக்கு பிடிக்குமா?