Skip to content

வெளிப்படுத்துதல் புத்தகம்​—அதை எப்படிப் புரிந்துகொள்வது?

வெளிப்படுத்துதல் புத்தகம்​—அதை எப்படிப் புரிந்துகொள்வது?

பைபிள் தரும் பதில்

 வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகத்தின் கிரேக்கப் பெயர் அப்போகலிப்ஸிஸ்; இதன் அர்த்தம் “வெளியரங்கமாக்குவது” அல்லது “திரையை விலக்குவது” என்பதாகும். இந்தப் பெயர் வெளிப்படுத்துதல் என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் குறிக்கிறது, அதாவது மறைத்து வைக்கப்பட்ட விஷயங்களை வெளியரங்கமாக்குவதையும், பல காலத்திற்குப் பிறகு நடக்கப்போகிற சம்பவங்களை முன்கூட்டியே திரை விலக்கிக் காட்டுவதையும் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற பல தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறப்போகின்றன.

வெளிப்படுத்துதல் புத்தகம்—ஒரு கண்ணோட்டம்

வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிற குறிப்புகள்

  1.   கடவுளை வணங்குகிற ஆட்களுக்கு அதிலுள்ள செய்தி நம்பிக்கை அளிக்கிறது, அவர்களைப் பயப்படுத்துவதோ நடுங்க வைப்பதோ கிடையாது. “அப்போகலிப்ஸ்” என்ற வார்த்தை மாபெரும் அழிவைக் குறிக்கிறதென பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசிப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அதிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களும் சந்தோஷமானவர்கள் என்றே அதன் ஆரம்ப வார்த்தைகளும் முடிவான வார்த்தைகளும் சொல்கின்றன.—வெளிப்படுத்துதல் 1:3; 22:7.

  2.   வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறைய ‘அடையாளங்களை’ சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.—வெளிப்படுத்துதல் 1:1.

  3.   வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள முக்கியமான பல விஷயங்களும் அடையாளங்களும் பைபிளின் முந்தைய புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளன:

  4.   வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் “எஜமானுடைய நாளுக்கு” பொருந்துகின்றன. அந்த நாள், கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டு, இயேசு அதன் ராஜாவாக ஆட்சியைத் தொடங்கியபோது ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 1:10) அதனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முக்கிய நிறைவேற்றம் நம்முடைய நாளில் நடக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.

  5.   மற்ற பைபிள் புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்கு தேவைப்படுகிற விஷயங்கள், வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்கும் தேவைப்படுகின்றன; அதாவது, கடவுள் தருகிற ஞானம், பைபிள் விஷயங்களைத் புரிந்து வைத்திருப்பவர்களின் உதவி போன்றவை தேவைப்படுகின்றன.—அப்போஸ்தலர் 8:26-39; யாக்கோபு 1:5.