Skip to content

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . .

  • அன்பா?

  • பணமா?

  • வேறு ஏதாவதா?

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”—லூக்கா 11:28, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

குடும்பத்தில் உண்மையான அன்பு இருக்கும்.—எபேசியர் 5:28, 29.

மதிப்பு மரியாதை இருக்கும்.—எபேசியர் 5:33.

ஒற்றுமை இருக்கும்.—மாற்கு 10:6-9.

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். இரண்டு காரணங்களுக்காக:

  • குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவரே கடவுள்தான். ‘ஒவ்வொரு குடும்பமும் யெகோவாவினால்தான் (கடவுளுடைய பெயர்) உருவாகியிருக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 3:14, 15) ஆம், குடும்ப ஏற்பாட்டை யெகோவாதான் முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார். இதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?

    யோசித்துப் பாருங்கள்: ஒரு சுவையான உணவைச் சாப்பிடும்போது, அதில் என்ன போட்டு சமைத்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். அதை யாரிடம் கேட்பீர்கள்? சமைத்தவரிடம்தானே?

    அதுபோல், சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க என்ன தேவை என்பதை குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனிடம் கேட்பதுதானே சரியாக இருக்கும்?—ஆதியாகமம் 2:18-24.

  • கடவுளுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது. “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 5:6, 7) நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார். உங்களுக்குப் பிரயோஜனமானதையே சொல்லிக்கொடுக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 48:17, 18) அதனால், அவருடைய வார்த்தையாகிய பைபிளில் இருக்கும் அறிவுரைப்படி குடும்பத்தார் நடந்தால் நிச்சயம் பயனடைவார்கள்.

சிந்தித்துப் பாருங்கள்:

நீங்கள் எப்படி ஒரு நல்ல கணவராக, நல்ல மனைவியாக, நல்ல பெற்றோராக இருக்கலாம்?

பைபிளின் பதில்: எபேசியர் 5:1, 2; கொலோசெயர் 3:18-21.