Skip to content

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?

பைபிள் தரும் பதில்

 நிச்சயம் உதவும்! குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க, பல லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவிய சில ஞானமான பைபிள் ஆலோசனைகளைக் கவனியுங்கள்:

  1.   திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்யுங்கள். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் ஒரு நீண்டகால ஒப்பந்தம்! இப்படிப் பதிவு செய்யப்பட்ட திருமணம், சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது.—மத்தேயு 19:4-6.

  2.   அன்பும் மரியாதையும் காட்டுங்கள். உங்கள் துணை உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதே போல உங்கள் துணையையும் நடத்துங்கள்.—மத்தேயு 7:12; எபேசியர் 5:25, 33.

  3.   கடுகடுப்பாகப் பேசாதீர்கள். உங்கள் துணை உங்களைப் புண்படுத்தும் விதத்தில் ஏதாவது செய்தாலும், பேசினாலும்கூட அவரிடம் அன்பாகப் பேசுங்கள். (எபேசியர் 4:31, 32) நீதிமொழிகள் 15:1 சொல்வதுபோல், “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.”

  4.   ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். உங்கள் துணையை மட்டுமே காதலியுங்கள்; அவரோடு மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள். (மத்தேயு 5:28) “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 13:4.

  5.   உங்கள் பிள்ளைகளுக்கு அன்பாகப் பயிற்சிக் கொடுங்கள். கண்டும் காணாமல் இருக்காதீர்கள்; கோபமாகவும் நடந்துகொள்ளாதீர்கள்.—நீதிமொழிகள் 29:15; கொலோசெயர் 3:21.