Skip to content

இந்த உலகம் யார் கையில்?

இந்த உலகம் யார் கையில்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . .

  • கடவுள் கையிலா?

  • மனிதர் கையிலா?

  • வேறொருவர் கையிலா?

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.”—1 யோவான் 5:19. “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.”—1 யோவான் 3:8, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

உலகப் பிரச்சினைகளுக்குச் சரியான காரணத்தைத் தெரிந்துகொள்வீர்கள்.—வெளிப்படுத்துதல் 12:12.

உலக நிலைமைகள் நிச்சயம் மாறுமென நம்புவீர்கள்.—1 யோவான் 2:17.

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். மூன்று காரணங்களுக்காக:

  • சாத்தானுடைய ஆட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது. சாத்தானுடைய ஆட்சிக்கு யெகோவா (கடவுளுடைய பெயர்) நிச்சயம் முடிவுகட்டுவார். ‘பிசாசை அழிக்கப்போவதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். அவனால் உண்டான எல்லா பாதிப்புகளையும் சரிசெய்வார்.—எபிரெயர் 2:14.

  • உலகை ஆள இயேசு கிறிஸ்துவை கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். சுயநலவாதியாகவும் கொடுமைக்காரனாகவும் இருக்கிற சாத்தானைப்போல இயேசு இருக்க மாட்டார். அவர் எப்படி ஆட்சி செய்வார் என்று யெகோவா கொடுத்த வாக்கைக் கவனியுங்கள்: “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். . . . கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:13, 14.

  • கடவுள் பொய் சொல்ல மாட்டார். ‘கடவுளால் பொய் சொல்லவே முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:18) அதனால், கொடுத்த வாக்கை யெகோவா நிச்சயம் நிறைவேற்றுவார். (ஏசாயா 55:10, 11) “இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்ற வாக்கும் நிச்சயம் நிறைவேறும்.—யோவான் 12:31.

சிந்தித்துப் பாருங்கள்

சாத்தானுடைய ஆட்சி ஒழிந்த பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும்?

பைபிளின் பதில்: சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:3, 4.