சங்கீதம் 37:1-40

தாவீதின் பாடல். א [ஆலெஃப்] 37  அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சலடையாதே.*பொல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+   அவர்கள் புல்லைப் போலச் சீக்கிரமாக வாடிப்போவார்கள்.+பசும்புல்லைப் போல வாடி வதங்கிப்போவார்கள். ב [பேத்]   யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்.+பூமியில் குடியிருந்து, உண்மையோடு நடந்துகொள்.+   யெகோவாவை வணங்குவதில்* அளவில்லாமல் சந்தோஷப்படு.அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார். ג [கீமெல்]   உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு.+அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.+   உன்னுடைய நீதியை விடியற்கால வெளிச்சம் போலவும்,உன்னுடைய நியாயத்தை நடுப்பகல் வெளிச்சம் போலவும் அவர் பிரகாசிக்க வைப்பார். ד [டாலத்]   யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இரு.+அவருக்காக நம்பிக்கையோடு* காத்திரு. சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிறமனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.+ ה [ஹே]   கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு.+எரிச்சல்பட்டு ஏதாவது தப்பு செய்துவிடாதே.*   அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+ ו [வா] 10  இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.+அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.+ 11  ஆனால், தாழ்மையானவர்கள்* இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.+ ז [ஸாயின்] 12  நீதிமானுக்கு எதிராகப் பொல்லாதவன் சூழ்ச்சி செய்கிறான்.+அவனைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறான். 13  ஆனால், அந்தப் பொல்லாதவனைப் பார்த்து யெகோவா சிரிப்பார்.ஏனென்றால், அவனுக்கு முடிவு வருமென்று அவருக்குத் தெரியும்.+ ח [ஹேத்] 14  அடக்கி ஒடுக்கப்படுகிற ஏழைகளைக் கொன்றுபோடுவதற்காக,நேர்மையாக நடக்கிறவர்களைப் படுகொலை செய்வதற்காக,பொல்லாதவர்கள் தங்களுடைய வாளை உருவுகிறார்கள், வில்லை வளைக்கிறார்கள். 15  ஆனால், அவர்களுடைய வாள் அவர்களுடைய நெஞ்சிலேயே பாயும்.+அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும். ט [டேத்] 16  பொல்லாதவர்கள் வைத்திருக்கிற ஏராளமான பொருள்களைவிடநீதிமான்கள் வைத்திருக்கிற கொஞ்சம் பொருளே மேல்.+ 17  பொல்லாதவர்களின் கைகள் முறிக்கப்படும்.ஆனால், நீதிமான்களுக்கு யெகோவா கைகொடுத்து உதவுவார். י [யோத்] 18  குற்றமற்றவர்கள் படுகிற கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும்.அவர்களுடைய சொத்து அழியாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 19  அழிவு காலத்தில் அவர்களுக்குத் தலைகுனிவு ஏற்படாது.பஞ்ச காலத்தில் அவர்களிடம் ஏராளமான உணவு இருக்கும். כ [காஃப்] 20  ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,புகையைப் போலவும் மறைந்துபோவார்கள். ל [லாமெத்] 21  பொல்லாதவன் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக்கொடுக்காமல் இருக்கிறான்.ஆனால், நீதிமான் தாராள மனதோடு* அள்ளிக் கொடுக்கிறான்.+ 22  கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ஆனால், அவருடைய சாபத்தைப் பெற்றவர்கள் அழிந்துபோவார்கள்.+ מ [மேம்] 23  ஒருவன் போகிற வழி யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,+அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவனுக்கு அவர் வழிகாட்டுவார்.*+ 24  அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.+ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.+ נ [நூன்] 25  நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோஇதுவரை நான் பார்த்ததில்லை.+ 26  அவன் தாராளமாகக் கடன் கொடுக்கிறான்.+அவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் காத்திருக்கிறது. ס [சாமெக்] 27  கெட்டதை விட்டுவிட்டு, நல்லது செய்.+அப்போது, என்றென்றும் நிலைத்திருப்பாய். 28  ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.+ ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.+ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள்.+ 29  நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.+ פ [பே] 30  நீதிமானுடைய வாய் ஞானத்தைப் பொழிகிறது.அவனுடைய நாவு நியாயத்தைப் பேசுகிறது.+ 31  அவனுடைய கடவுளின் சட்டம் அவன் இதயத்தில் இருக்கிறது.+அவனுடைய கால்கள் தடுமாறாது.+ צ [சாதே] 32  நீதிமானைப் பொல்லாதவன் நோட்டமிடுகிறான்.அவனைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிறான். 33  ஆனால், யெகோவா அவனைப் பொல்லாதவனுடைய கையில் விட்டுவிட மாட்டார்.+அவனைக் குற்றவாளி என்று நியாயந்தீர்க்க மாட்டார்.+ ק [கோஃப்] 34  யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நட.அப்போது, அவர் உன்னை உயர்த்துவார், இந்தப் பூமியை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பார். பொல்லாதவர்கள் அழிந்துபோவதை+ நீ பார்ப்பாய்.+ ר [ரேஷ்] 35  ஈவிரக்கமே இல்லாத அக்கிரமக்காரனை நான் பார்த்தேன்.சொந்த மண்ணில் செழித்து வளர்ந்திருக்கிற மரம்போல் அவன் இருந்தான்.+ 36  ஆனால் திடீரென்று ஒருநாள், அவன் இல்லாமல் போய்விட்டான்.+அவனை எவ்வளவோ தேடினேன், ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.+ ש [ஷீன்] 37  நீ குற்றமற்றவனை* கவனி.நேர்மையானவனை எப்போதும் பார்.+ஏனென்றால், அவனுடைய எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.+ 38  குற்றவாளிகள் எல்லாரும் அழிக்கப்படுவார்கள்.பொல்லாதவர்களுக்கு எந்த எதிர்காலமும் கிடையாது.+ ת [ட்டா] 39  நீதிமான்களை யெகோவா மீட்கிறார்.+இக்கட்டான காலத்தில் அவரே அவர்களுக்குக் கோட்டையாக இருப்பார்.+ 40  யெகோவா அவர்களுக்கு உதவி செய்வார், அவர்களைக் காப்பாற்றுவார்.+ பொல்லாதவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து, பாதுகாப்பார்.ஏனென்றால், அவர்கள் அவரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொதிப்படையாதே.”
வே.வா., “யெகோவாவில்.”
வே.வா., “பொறுமையோடு.”
அல்லது, “எரிச்சல் அடையாதே, அதனால் தீமைதான் ஏற்படும்.”
வே.வா., “சாந்தமானவர்கள்.”
வே.வா., “கருணையோடு.”
வே.வா., “அவனுடைய காலடிகளை உறுதிப்படுத்துவார்.”
வே.வா., “அவரிடம் பற்றுமாறாமல்.”
வே.வா., “உத்தமமாக நடக்கிறவனை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா