Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?

 அநியாயமான பொருளாதார நிலைமை இருப்பதால் ஒன்றன் பின் ஒன்றாக நிறைய நாடுகளில் மக்கள் போராட்டங்களில் குதித்தார்கள். கோவிட்-19 சமயத்தில் இதை அதிகமாக பார்க்க முடிந்தது. ‘லாக்டவுன்,’ உணவு தட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சைகளுக்கு தட்டுப்பாடு ஆகியவற்றால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் இருக்கிற ஏற்றத்தாழ்வு பெரிதாக தெரிந்தது.

 எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா? கண்டிப்பாக வரும்! இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

பொருளாதார பிரச்சினைகளை கடவுள் சரி செய்வார்

 பிரச்சினை: எல்லா மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாதாரத்தை மனிதர்களால் இதுவரை அமைக்கவே முடியவில்லை.

 தீர்வு: கடவுள் எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கிவிட்டு அவருடைய அரசாங்கத்தை கொண்டுவருவார். அது பரலோகத்தில் இருந்து முழு பூமியையும் ஆட்சி செய்யும்.—தானியேல் 2:44; மத்தேயு 6:10.

 பலன்: பூமி முழுவதற்கும் ஒரே அரசாங்கம் இருக்கப்போவதால், அந்த அரசாங்கத்தால் பூமியை எந்த குறையும் இல்லாமல் சரியாக நிர்வகிக்க முடியும். மக்கள் யாருமே வறுமையில் வாட மாட்டார்கள். பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமோ என்று பயப்பட மாட்டார்கள். (சங்கீதம் 9:7-9, 18) அதற்குப் பதிலாக, தங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பார்கள். குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்வார்கள். “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—ஏசாயா 65:21, 22.

 பிரச்சினை: மக்கள் வேதனையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அடிப்படை தேவைகளுக்காகவே போராட வேண்டியிருக்கிறது.

 தீர்வு: பயத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலையும் கடவுளுடைய அரசாங்கம் சரி செய்யும். மக்களை பாதுகாப்பாக வாழ வைக்கும்.

 பலன்: அடிப்படை தேவைகளைக்கூட வாங்க முடியாத சூழ்நிலை கடவுளுடைய அரசாங்கத்தில் வராது. உதாரணத்துக்கு, போர், பஞ்சம், பெருந்தொற்று ஆகியவை அங்கே இருக்காது. (சங்கீதம் 46:9; 72:16; ஏசாயா 33:24) “என் ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள். பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 32:18.

 பிரச்சினை: பேராசை பிடித்தவர்களும் சுயநலமுள்ளவர்களும் மற்றவர்களை ஏறி மிதிக்கிறார்கள்.

 தீர்வு: கடவுளுடைய அரசாங்கத்தில் வாழும் மக்கள் சுயநலமாக இல்லாமல் மற்றவர்கள்மேல் உண்மையான அன்பைக் காட்டுவார்கள்.—மத்தேயு 22:37-39.

 பலன்: கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் மக்கள் கடவுளைப் போலவே அன்பு காட்டுவார்கள். அப்படி அன்பு காட்டுவதால், அவர்கள் ‘சுயநலமாக நடந்துகொள்ள’ மாட்டார்கள். (1 கொரிந்தியர் 13:4, 5) “என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது. ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் a பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 11:9.

 நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. எல்லா பொருளாதார பிரச்சினைகளையும் சரிசெய்வதாக கொடுத்திருக்கிற வாக்குறுதியை கடவுள் சீக்கிரத்தில் நிறைவேற்றுவார். b (சங்கீதம் 12:5) அதுவரைக்கும் பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பைபிளில் இருக்கிற நியமங்கள் உங்களுக்கு உதவி செய்யும். உதாரணத்துக்கு, “குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?” என்ற கட்டுரையையும் “பணம்தான் வாழ்க்கையா?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 83:18.

b பைபிளை நீங்கள் ஏன் நம்பலாம் என்று தெரிந்துகொள்ள, ”பைபிள்—உண்மைகளின் களஞ்சியம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.