Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் தரும் பதில்கள்

பைபிள் தரும் பதில்கள்

பசி-பட்டினியே இல்லாத காலம் வருமா?

கடவுள் எப்படி வறுமையை ஒழிக்கப் போகிறார்?—மத்தேயு 6:9, 10.

பசி... பட்டினி... வியாதி... இதற்கெல்லாம் முக்கிய காரணமே ஏழ்மையும் வறுமையும்தான். இதனால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோகிறார்கள். ஒரு பக்கம் பணக்கார நாடுகளில் இருப்பவர்கள் வசதியாக வாழ்ந்தாலும், இன்னொரு பக்கம் நிறைய பேர் வயிற்றுப் பிழைப்புக்கே தினம் தினம் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சினை இன்று நேற்றல்ல, காலம் காலமாக இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது.யோவான் 12:8-ஐ வாசியுங்கள்.

இந்த உலகத்தையே ஒரே அரசாங்கம் ஆட்சி செய்தால்தான் வறுமையை ஒழிக்க முடியும். அந்த அரசாங்கம் முதலில் போர்களை ஒழிக்க வேண்டும். ஏனென்றால், வறுமைக்கு காரணமே போர்கள்தான். மக்கள் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேவையானதை எல்லாம் அந்த அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் இதையெல்லாம் செய்ய முடியும்.தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.

பசி-பட்டினியை யாரால் ஒழிக்க முடியும்?

இயேசுதான் இந்த உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார். கடவுள் அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 2:4-8) அவர் ஆட்சி செய்யும்போது ஏழைகளை காப்பாற்றுவார். அதற்குப் பிறகு யாரும் அவர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்.சங்கீதம் 72:8, 12-14-ஐ வாசியுங்கள்.

இயேசு ஆட்சி செய்யும்போது, உலகத்தில் போரே இருக்காது, எல்லாருக்கும் சொந்த வீடு இருக்கும், நல்ல வேலை இருக்கும், வயிறார சாப்பிடுவதற்கு நிறைய உணவு இருக்கும்.ஏசாயா 9:6, 7; 65:21-23-ஐ வாசியுங்கள். (w15-E 10/01)