Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பாதுகாப்பு​—பைபிளின் கருத்து

பெண்கள் பாதுகாப்பு​—பைபிளின் கருத்து

 உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருத்தரா? பெண்களின் பாதுகாப்பைக் கடவுள் ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார். ஏன்? பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? படித்துப் பாருங்கள்.

 “சின்ன வயதில், என்னுடைய அண்ணன் தினமும் என்னைப் போட்டு அடித்தான். கண்டபடி திட்டினான். கல்யாணத்துக்குப் பிறகு மாமியாரின் கொடுமை. மாமியாரும் மாமனாரும் சேர்ந்து என்னை அடிமை மாதிரி நடத்தினார்கள். தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட அடிக்கடி நினைத்தேன்.”—மது, a இந்தியா.

 “உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சர்வசாதாரணம் ஆகிவிட்டது” என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறது. கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருத்தர் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் உடல் ரீதியிலோ பாலியல் ரீதியிலோ தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் என்றும் அந்த அமைப்பு சொல்கிறது.

 நீங்கள் ஒருவேளை இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால், எங்கே போனாலும் இந்த மாதிரி கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் வரலாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாலியல் கொடுமைகளையும் பார்க்கும்போது பெண்களை வெறும் கிள்ளுக்கீரையாகத்தான் நிறைய பேர் பார்க்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் பெண்களைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார்?

பெண்களுடைய பாதுகாப்பை கடவுள் ரொம்ப முக்கியமாக நினைக்கிறார் என்று பைபிள் சொல்கிறது

பெண்களைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?

 வசனம்: “ஆணையும் பெண்ணையும் [கடவுள்] படைத்தார்.”—ஆதியாகமம் 1:27.

 அர்த்தம்: ஆண், பெண் இரண்டு பேரையுமே படைத்தது கடவுள்தான். இருவருக்குமே மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஒரு கணவன் ‘தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்,’ மனைவியை அடக்கி ஆளக் கூடாது என்று கடவுள் எதிர்பார்க்கிறார். அப்படியானால், பெண்களுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதோ, வன்முறையைப் பயன்படுத்துவதோ தவறு. (எபேசியர் 5:33; கொலோசெயர் 3:19) இதிலிருந்து, பெண்களின் பாதுகாப்புக்குக் கடவுள் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

 “சிறுவயதில், என் சொந்தக்காரர்கள் எனக்குப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். 17 வயதில், என் முதலாளி தன்னோடு செக்ஸ் வைத்துக்கொள்ளச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினார். ஒத்துக்கொள்ளாவிட்டால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாக மிரட்டினார். என் புருஷன், அப்பா-அம்மா, அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் என யாருமே என்னை மதிக்கவில்லை. பிறகுதான், நம்மைப் படைத்த கடவுளான யெகோவாவை b பற்றித் தெரிந்துகொண்டேன். அவர் பெண்களை மதிக்கிறார் என புரிந்துகொண்டேன். என்னையும் கடவுளுக்குப் பிடிக்கும், என்னையும் அவர் உயர்வாக மதிக்கிறார் என்று தெரிந்துகொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது.”—மரியா, அர்ஜென்டினா.

மனதின் ரணங்கள் மறைய எது உங்களுக்கு உதவும்?

 வசனம்: ‘கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பன் உண்டு.’—நீதிமொழிகள் 18:24.

 அர்த்தம்: உண்மையான நண்பர்களால் உங்களுக்கு உதவ முடியும். முடிந்தால், நீங்கள் நம்பும் ஒருத்தரிடம் உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லுங்கள்.

 “எனக்குப் பாலியல் வன்கொடுமை நடந்ததை 20 வருஷமாக எனக்குள்ளேயே வைத்திருந்தேன். அதனால், என் சந்தோஷத்தை இழந்துவிட்டேன். கவலையும் மனச்சோர்வும்தான் மிஞ்சியது. கடைசியில், எனக்கு நடந்ததை ஒருத்தரிடம் மனசுவிட்டு பேசினேன். பிறகுதான், பெரிய நிம்மதி கிடைத்தது. அதை விவரிக்க வார்த்தையே இல்லை.”—எலிஃப், துர்க்கியே.

 வசனம்: “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

 அர்த்தம்: உங்கள் ஜெபத்தை கடவுள் நிஜமாகவே கேட்பார். (சங்கீதம் 55:22; 65:2) அவர் உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார். நீங்கள் அவருக்குத் தங்கமானவர் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவார்.

 “யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, என் மனதிலிருந்த வலி குறைய ஆரம்பித்தது. என் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஒரு ஃபிரெண்டாக நான் இப்போது கடவுளைப் பார்க்கிறேன். அதனால், என் மனதில் இருப்பதை எல்லாம் அவரிடம் என்னால் கொட்ட முடிகிறது.”—ஆன்னா, பெலீஸ்.

பெண்களுக்கு எதிரான அநீதிக்கு கடவுள் முடிவுகட்டுவாரா?

 வசனம்: “யெகோவாவே . . . அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் நியாயம் வழங்குவீர்கள். அதன் பிறகு, இந்த உலகத்திலுள்ள அற்ப மனுஷர்கள் யாரும் அவர்களைப் பயமுறுத்த முடியாது.”—சங்கீதம் 10:17, 18.

 அர்த்தம்: பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை என எல்லா அநீதிக்கும் கடவுள் சீக்கிரம் முடிவுகட்டுவார்.

 “பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான கொடுமைகளுக்கு யெகோவா சீக்கிரம் முடிவுகட்டுவார் என்று தெரிந்துகொண்டது மனதுக்கு இதமாக, நிம்மதியாக இருந்தது.”—ராபர்டா, மெக்சிகோ.

பைபிள் நமக்கு என்ன நம்பிக்கை தருகிறது? பைபிளில் இருக்கும் வாக்குறுதிகளை நீங்கள் ஏன் நம்பலாம்? இன்று யெகோவாவின் சாட்சிகள் எப்படி பைபிள் மூலமாக மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள, உங்களைச் சந்தித்து இலவசமாக இதைப் பற்றி அவர் உங்களுக்குச் சொல்வார்.

 இந்தக் கட்டுரையின் PDF-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.