சங்கீதம் 10:1-18

ל [லாமெத்] 10  யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்கள்? இக்கட்டான காலத்தில் ஏன் ஒளிந்துகொள்கிறீர்கள்?+   பொல்லாதவன் ஆதரவற்றவர்களை அகம்பாவத்தோடு வேட்டையாடுகிறான்.+ஆனால், அவன் போடுகிற சதித்திட்டங்களில் அவனே சிக்கிக்கொள்வான்.+   பொல்லாதவன் தன்னுடைய சுயநல ஆசைகளைப் பற்றிப் பெருமையடிக்கிறான்.+பேராசைக்காரனைப் பாராட்டுகிறான்.*נ [நூன்]யெகோவாவை அவமதிக்கிறான்.   பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.“கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+   அவன் செய்கிற எல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றி கிடைக்கிறது.+ஆனால், உங்களுடைய நீதித்தீர்ப்புகளை அவனால் புரிந்துகொள்ள முடிவதே இல்லை.+தன்னுடைய எதிரிகள் எல்லாரையும் மட்டம்தட்டிப் பேசுகிறான்.   அவன் தன் இதயத்தில்,“என்னை யாரும் அசைக்க முடியாது,*எத்தனை தலைமுறை வந்தாலும் எனக்கு ஒன்றுமே ஆகாது” என்று சொல்லிக்கொள்கிறான்.+ פ [பே]   அவன் வாயைத் திறந்தாலே சாபங்களும் பொய்களும் மிரட்டல்களும்தான் வருகின்றன.+அவனுடைய நாவிலிருந்து வருவதெல்லாம் பொல்லாத வார்த்தைகளும் புண்படுத்துகிற வார்த்தைகளும்தான்.+   கிராமங்களுக்குப் பக்கத்தில் அவன் பதுங்கியிருக்கிறான்.மறைந்திருந்து அப்பாவியைக் கொன்றுபோடுகிறான்.+ ע [ஆயின்] யார் சிக்குவார்கள் என்று நோட்டமிட்டுக்கொண்டே இருக்கிறான்.+   குகையில்* இருக்கிற சிங்கத்தைப் போலப் பதுங்கியிருக்கிறான்.+ ஆதரவற்றவனைப் பிடிக்கக் காத்திருக்கிறான். அவனைத் தன் வலையில் சிக்க வைத்துப் பிடிக்கிறான்.+ 10  பின்பு அவனை நொறுக்கித் தள்ளுகிறான்.அந்தப் பொல்லாதவனின் கோரப்பிடிக்குள் அப்பாவிகள் சிக்கிக்கொள்கிறார்கள். 11  அவன் தன்னுடைய இதயத்தில், “கடவுள் மறந்துவிட்டார்.+ தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கவனிப்பதே இல்லை” என்று சொல்லிக்கொள்கிறான்.+ ק [கோஃப்] 12  யெகோவாவே, எழுந்து வாருங்கள்.+ கடவுளே, கை நீட்டி உதவுங்கள்.+ ஆதரவற்றவர்களை மறந்துவிடாதீர்கள்.+ 13  பொல்லாதவன் ஏன் கடவுளை அவமதிக்கிறான்? அவன் தன் இதயத்தில், “நான் செய்வதையெல்லாம் கடவுள் கண்டுகொள்ள மாட்டார்” என்று சொல்லிக்கொள்கிறான். ר [ரேஷ்] 14  ஆனால், தொல்லைகளையும் துன்பங்களையும் நீங்கள் நிச்சயமாகவே பார்க்கிறீர்கள். பார்த்து நடவடிக்கையும் எடுக்கிறீர்கள்.+ கொடுமைக்கு ஆளானவன் உங்களைத்தான் தேடி வருகிறான்.+அப்பா இல்லாத பிள்ளைக்கு* நீங்கள்தான் துணை.+ ש [ஷீன்] 15  அக்கிரமம் செய்கிற பொல்லாதவனின் கையை உடைத்துப்போடுங்கள்.+அதன் பிறகு நீங்கள் தேடிப் பார்த்தாலும்,அவனிடம் அக்கிரமத்தைக் கண்டுபிடிக்க முடியாது.* 16  யெகோவா என்றென்றும் ராஜாவாக இருக்கிறார்.+ தேசங்கள் இந்தப் பூமியிலிருந்து அழிந்துவிட்டன.+ ת [ட்டா] 17  யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+ 18  அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கும் நியாயம் வழங்குவீர்கள்.+அதன் பிறகு, இந்த உலகத்திலுள்ள அற்ப மனுஷர்கள் யாரும் அவர்களைப் பயமுறுத்த முடியாது.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “பேராசைக்காரன் தன்னையே பாராட்டிக்கொள்கிறான்.”
வே.வா., “நான் தடுமாறவே மாட்டேன்.”
வே.வா., “புதரில்.”
வே.வா., “அநாதைக்கு.”
வே.வா., “அவனிடம் துளியும் அக்கிரமம் காணப்படாத அளவுக்கு அவனைத் தண்டியுங்கள்.”
வே.வா., “சாந்தமானவர்களின்.”
வே.வா., “உறுதிப்படுத்துவீர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா