Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தனிமையை சமாளிப்பது எப்படி?

தனிமையை சமாளிப்பது எப்படி?

 நீங்கள் தனிமையில் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், “கூரைமேல் தனியாக உட்கார்ந்திருக்கிற பறவை போல இருக்கிறேன்” என்று சொன்ன ஒருவரைப் போலவே நீங்களும் உணரலாம். (சங்கீதம் 102:7) தனிமையின் கொடுமையை சமாளிக்க பைபிள் அருமையான ஆலோசனைகளைத் தருகிறது.

 கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

 நீங்கள் தனியாக இருந்தாலும், உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படி? கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் ஆன்மீக ஆர்வப்பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு சந்தோஷத்தை தரும். (மத்தேயு 5:3, 6) அதைச் செய்ய ஆரம்பிப்பதற்கு இந்த இலவச ஏற்பாடுகள் உங்களுக்கு உதவும்:

 பைபிளிலுள்ள ஆறுதலான வசனங்களைப் படியுங்கள்

 இந்த வசனங்கள் நிறைய பேருக்கு ஆறுதல் தந்திருக்கின்றன. ஒரே சமயத்தில் இந்த எல்லா பகுதிகளையும் வாசிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பகுதியாக வாசித்து, அதைப் பற்றித் தியானித்து, ஜெபம் செய்யுங்கள். இப்படி, தனிமையில் இருக்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—மாற்கு 1:35.

 உலகத்தில் ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

 கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன, அதற்கெல்லாம் கடவுள் எப்படி முடிவுகட்டுவார் என்பதைத் தெரிந்துகொண்டால் எப்படிப்பட்ட பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும்.—ஏசாயா 65:17.

 அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள்

 மற்றவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்

 தெளிவாக யோசிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள். முக்கியமாக, மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியாத சமயங்களில் நமக்கு நண்பர்கள் இருப்பது ரொம்ப முக்கியம். நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அல்லது ஃபோன் மூலம் உங்கள் நண்பர்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது மற்றவர்களைப் புதிய நண்பர்களாக்கிக்கொள்ளலாம். உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்கவும், ‘உண்மையான நண்பராக’ இருக்கவும் இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 17:17.

 சுறுசுறுப்பாக இருங்கள்

 “உடற்பயிற்சி . . . நன்மை தரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) முக்கியமாக தனிமையில் வாடும்போது, தெளிவாக யோசிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் உடற்பயிற்சி உதவி செய்யும். நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும், சுறுசுறுப்பாக இருப்பதற்கு நிறைய விஷயங்களைச் செய்யலாம்.