Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

John Moore/Getty Images

ஆரோக்கியம்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

ஆரோக்கியம்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

 “கோவிட்-19 பெருந்தொற்று இப்போது பெரிய பிரச்சினையாக இல்லாததால், உலகத்தில் இருக்கிற மக்களுக்கு அந்தப் பெருந்தொற்றால் எந்தப் பாதிப்புமே வராது என்று சொல்லிவிட முடியாது. . . . இதே மாதிரி ஒரு பெருந்தொற்று திரும்பவும் நம் கதவைத் தட்டலாம். அதையும் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.”—டாக்டர் டெட்ராஸ் ஆடனாம் கெப்ரியாசிஸ், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குனர், மே 22, 2023.

 கோவிட்-19 பெருந்தொற்றினால் நிறையப் பேருடைய உடல்நலமும் மனநலமும் இப்போதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய அரசாங்கமும் சுகாதார பாதுகாப்பு அமைப்புகளும் தயாராக இருக்கின்றனவா? இதே மாதிரி இன்னொரு பெருந்தொற்று வந்தால் அதைச் சமாளிக்க அவை தயாராக இருக்கின்றனவா?

 நமக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரப்போகும் ஒரு அரசாங்கத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. அந்த அரசாங்கத்தை ‘பரலோகத்தின் கடவுள் ஏற்படுத்துவார்.’ (தானியேல் 2:44) அந்த அரசாங்கத்தில் வாழும் மக்கள் யாருமே, “’எனக்கு உடம்பு சரியில்லை’ என்று . . . சொல்ல மாட்டார்கள்.” (ஏசாயா 33:24) எல்லாரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், இளமை துடிப்போடும் வாழ்வார்கள்.—யோபு 33:25.