Skip to content

பைபிள் வெள்ளைக்காரர்களின் புத்தகமா?

பைபிள் வெள்ளைக்காரர்களின் புத்தகமா?

பைபிள் தரும் பதில்

 பைபிள், ஐரோப்பியர்கள் எழுதின ஒரு புத்தகம் அல்ல. அதை எழுதுவதற்காக கடவுள் பயன்படுத்தின ஆட்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள். ஒரு இனத்தைவிட இன்னொரு இனம் உயர்ந்தது என்று பைபிள் சொல்வதில்லை. அதற்கு பதிலாக, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்றுதான் சொல்கிறது.—அப்போஸ்தலர் 10:34, 35.