Skip to content

கடவுள் ஒரு திரித்துவமா?

கடவுள் ஒரு திரித்துவமா?

பைபிள் தரும் பதில்

 கடவுள் ஒரு திரித்துவம் என்று நிறைய கிறிஸ்தவப் பிரிவுகள் கற்பிக்கின்றன. ஆனால் என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா என்ன சொல்கிறதென்று கவனியுங்கள்: “திரித்துவம் என்ற வார்த்தையோ திரித்துவக் கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படுவதில்லை . . . இந்தக் கோட்பாடு பல சர்ச்சைகளுக்கிடையே பல நூற்றாண்டு காலப்பகுதியில் மெல்ல மெல்ல உருவானது.”

 சொல்லப்போனால், கடவுள் திரித்துவத்தின் பாகமானவர் என்று பைபிளில் எங்கேயுமே விவரிக்கப்படுவதில்லை. இந்த பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:

 “நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா.”—உபாகமம் 6:4.

 “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.”—சங்கீதம் 83:18.

 “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”—யோவான் 17:3.

 “கடவுள் ஒருவர்தான்.”—கலாத்தியர் 3:20.

 கடவுள் ஒரு திரித்துவம் என்று பெரும்பாலான கிறிஸ்தவப் பிரிவுகள் ஏன் சொல்கின்றன?