கலாத்தியருக்குக் கடிதம் 3:1-29

3  புத்தியில்லாத கலாத்தியர்களே, இயேசு கிறிஸ்து மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது உங்களுக்குத் தத்ரூபமாக விளக்கிக் காட்டப்படவில்லையா?+ அப்படியிருக்கும்போது, இந்தக் கெட்ட செல்வாக்கின்கீழ் உங்களைக் கொண்டுவந்தவன் யார்?+  உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: உங்களுக்குக் கடவுளுடைய சக்தி எதனால் கிடைத்தது? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா, அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா?+  ஆன்மீக வழியில் ஆரம்பித்த கிறிஸ்தவ வாழ்க்கையை இப்போது பாவ வழியில் முடித்துக்கொள்ளப் போகிறீர்களா?+ இந்தளவுக்கு நீங்கள் புத்தியில்லாதவர்களா?  வீணாகத்தான் இத்தனை பாடுகள் பட்டீர்களா? கண்டிப்பாக அப்படியிருக்க முடியாது.  உங்களுக்குச் சக்தியைக் கொடுத்து உங்கள் மத்தியில் அற்புதங்களை* செய்கிறவர்+ எதனால் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா?  ஆபிரகாமும் “யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+  விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்பது நிச்சயமாகவே உங்களுக்குத் தெரியும்.  விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.+  அதனால், விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமைப் போல+ ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 10  திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 11  அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது. 12  விசுவாசம்தான் முக்கியம் என்று திருச்சட்டம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்” என்றுதான் சொல்கிறது.+ 13  “மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ கிறிஸ்து நமக்குப் பதிலாகச் சாபமாகி, நம்மை விலைகொடுத்து வாங்குவதன் மூலம்+ திருச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுதலை செய்தார்.+ 14  ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவின் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,+ வாக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியை நாம் விசுவாசத்தால் பெற்றுக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும்தான் அப்படிச் செய்தார். 15  சகோதரர்களே, உலக வழக்கிலிருந்து ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்: ஒரு மனிதனால் உறுதி செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட யாராலும் செல்லாததாக்கவோ, அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது. 16  ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.+ “சந்ததிகளுக்கு” என்று பலரைப் பற்றிச் சொல்லாமல், “உன் சந்ததிக்கு” என்று ஒருவரைப் பற்றித்தான் வேதவசனம் சொல்கிறது; அந்தச் சந்ததி கிறிஸ்துதான்.+ 17  அதோடு நான் சொல்கிறேன்: கடவுளால் முன்பு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 430 வருஷங்களுக்குப் பின்பு வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிடாது,+ அவருடைய வாக்குறுதியை ஒழித்தும்விடாது. 18  கடவுள் கொடுக்கிற ஆஸ்தி திருச்சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறதென்றால், இனி அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்காது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு ஒரு வாக்குறுதியின் மூலம் கொடுத்திருக்கிறார்.+ 19  அப்படியானால், திருச்சட்டம் எதற்கு? வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை+ குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.+ தேவதூதர்களைக் கொண்டு+ ஒரு மத்தியஸ்தர் மூலம்+ அது கொடுக்கப்பட்டது. 20  ஒருவர் மட்டுமே செயல்படும்போது மத்தியஸ்தர் தேவையில்லை. அதனால், வாக்குறுதி கொடுத்தபோது கடவுள் ஒருவர்தான் செயல்பட்டார். 21  அப்படியானால், திருச்சட்டம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு எதிராக இருக்கிறதா? இல்லவே இல்லை! வாழ்வு தரக்கூடிய ஒரு சட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் மூலமாகவே ஒருவர் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஆகியிருக்கலாம். 22  ஆனால், இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு அந்த விசுவாசத்தின் மூலம் கடவுளுடைய வாக்குறுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக வேதவசனம் எல்லாரையும் பாவத்தின் சிறையில் ஒட்டுமொத்தமாக அடைத்திருக்கிறது. 23  ஆனாலும், கிறிஸ்தவ விசுவாசம் வருவதற்கு முன்னால், நாம் திருச்சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டு அதன் காவலில் இருந்தோம், அந்த விசுவாசம் வெளிப்படுவதற்காகக் காத்திருந்தோம்.+ 24  இப்படி, விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகத் திருச்சட்டம்+ நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற பாதுகாவலராக* இருந்து வந்தது.+ 25  ஆனால், இப்போது கிறிஸ்தவ விசுவாசம் வந்துவிட்டதால்+ நாம் இனி அந்தப் பாதுகாவலரின்கீழ் இல்லை.+ 26  சொல்லப்போனால், நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவின்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால்+ கடவுளுடைய மகன்களாக+ ஆகியிருக்கிறீர்கள். 27  கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் எல்லாரும் கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள்.*+ 28  இனி உங்களிடையே யூதன் என்றோ கிரேக்கன் என்றோ இல்லை.+ அடிமை என்றோ சுதந்திரமானவன் என்றோ இல்லை.+ ஆண் என்றோ பெண் என்றோ இல்லை.+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கிறீர்கள்.+ 29  அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக,+ வாக்குறுதியின்படி+ அவருடைய வாரிசுகளாக+ இருக்கிறீர்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “வல்லமையான செயல்களை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “ஆசானாக.”
வே.வா., “கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுகிறீர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா