சங்கீதம் 36:1-12

இசைக் குழுவின் தலைவனுக்கு; யெகோவாவின் ஊழியரான தாவீதின் பாடல். 36  பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+   அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+   அவன் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் புண்படுத்துகின்றன, ஏமாற்றுகின்றன.நல்லது செய்வதற்குத் தேவையான விவேகம்* அவனிடம் இல்லை.   படுத்திருக்கும்போதுகூட அவன் சதித்திட்டங்களைத் தீட்டுகிறான். தவறான பாதையிலேயே போகிறான்.கெட்ட விஷயங்களை ஒதுக்கித்தள்ளாமல் இருக்கிறான்.   யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு வானத்தைப் போல உயர்ந்தது.+உங்களுடைய உண்மைத்தன்மை மேகங்களைப் போல உயர்ந்தது.   உங்களுடைய நீதி கம்பீரமான மலைகளை* போல இருக்கிறது.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் மாபெரும் ஆழ்கடலைப் போல இருக்கின்றன.+ யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் நீங்கள்தான் பாதுகாக்கிறீர்கள்.*+   கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது!+ உங்களுடைய சிறகுகளின் நிழலில்மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்.+   உங்கள் வீட்டில் கிடைக்கும் ஏராளமான நன்மைகளால்* அவர்கள் திருப்தியடைகிறார்கள்.+நீங்கள் சந்தோஷத்தைப் பெருக்கெடுத்து ஓட வைத்து, அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கிறீர்கள்.+   உயிரின் ஊற்று நீங்கள்தான்.+உங்களுடைய ஒளியால் நாங்கள் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்.+ 10  உங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்.+நேர்மையான நெஞ்சமுள்ளவர்களுக்கு உங்களுடைய நீதியை எப்போதும் காட்டுங்கள்.+ 11  ஆணவமுள்ளவர்கள் என்னைக் காலில் போட்டு மிதிக்கும்படி விட்டுவிடாதீர்கள்,பொல்லாதவர்கள் என்னை விரட்டியடிக்க விட்டுவிடாதீர்கள். 12  அதோ! அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்.எழுந்திருக்க முடியாதபடி அவர்கள் தள்ளப்பட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “காப்பாற்றுகிறீர்கள்.”
நே.மொ., “கடவுளின் மலைகளை.”
நே.மொ., “உங்கள் வீட்டின் கொழுமையால்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா