Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 25

ராஜ்ய மன்றம்​—⁠ஏன் கட்டுகிறோம், எப்படி கட்டுகிறோம்?

ராஜ்ய மன்றம்​—⁠ஏன் கட்டுகிறோம், எப்படி கட்டுகிறோம்?

பொலிவியா

நைஜீரியா அன்றும் இன்றும்

டஹிடி

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றித்தான், அதாவது அரசாங்கத்தைப் பற்றித்தான், இயேசு எல்லாருக்கும் சொன்னார். (லூக்கா 8:1) எங்களுடைய கூட்டங்களிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றித்தான் முக்கியமாக சொல்லித்தருகிறார்கள். அதனால்தான், எங்களுடைய கூட்டங்கள் நடக்கிற இடத்தை ‘ராஜ்ய மன்றம்’ என்று சொல்கிறோம்.

கடவுளை வணங்குவதற்கு கூடிவருகிற இடம். எங்கள் சபைகள் இருக்கும் இடங்களில் செய்யப்படும் ஊழிய வேலைகளுக்கான ஏற்பாடுகள் ராஜ்ய மன்றத்தில்தான் நடக்கின்றன. (மத்தேயு 24:14) எல்லா ராஜ்ய மன்றங்களும் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். சில இடங்களில், ஒரே ராஜ்ய மன்றத்தை நிறைய சபைகள் பயன்படுத்துகின்றன. சமீப காலத்தில், நாங்கள் நூற்றுக்கணக்கான ராஜ்ய மன்றங்களை (ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 மன்றங்கள்) கட்டியிருக்கிறோம். ஏன் இத்தனை மன்றங்கள்? ஏனென்றால், நிறையப் பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆகிறார்கள், நாளுக்கு நாள் சபைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அதனால், நிறைய ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. சரி, இதற்கெல்லாம் பணம் எப்படி கிடைக்கிறது?—மத்தேயு 19:26.

ராஜ்ய மன்றம் கட்டுவதற்காக ஒவ்வொரு சபையும் கிளை அலுவலகத்துக்கு நன்கொடை அனுப்பி வைக்கிறது. கிளை அலுவலகம் இந்தப் பணத்தை தனியாக ஒதுக்கி வைக்கும். எந்த சபையாவது ராஜ்ய மன்றம் கட்டினாலோ புதுப்பித்தாலோ அவர்களுக்கு கிளை அலுவலகம் இந்தப் பணத்தைக் கொடுக்கும்.

கட்டுமான வேலையை வாலண்டியர்கள் செய்கிறார்கள். நிறைய நாடுகளில் ராஜ்ய மன்ற கட்டுமான குழுக்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்களில் இருக்கிறவர்கள் அந்தந்த நாட்டில் இருக்கிற சபைகளுக்குப் போய் ராஜ்ய மன்றங்களை கட்டித் தருகிறார்கள். ரொம்ப தூரமான இடங்களுக்கும் போய் கட்டித் தருகிறார்கள். இன்னும் சில நாடுகளில், ராஜ்ய மன்றங்களை கட்டுகிற வேலையையும் புதுப்பிக்கிற வேலையையும் மேற்பார்வை செய்வதற்கு அனுபவமுள்ள சகோதரர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கட்டுமான வேலை செய்வதற்கு திறமையுள்ளவர்கள் மற்ற இடங்களிலிருந்து வருகிறார்கள். எந்த சபைக்காக ராஜ்ய மன்றம் கட்டப்படுகிறதோ அந்த சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் நிறையப் பேர் அந்த வேலைக்கு உதவுகிறார்கள். யெகோவாவின் சக்தியாலும் அவருடைய மக்கள் எடுக்கிற முயற்சியாலும்தான் இந்த வேலையை செய்ய முடிகிறது.—சங்கீதம் 127:1; கொலோசெயர் 3:23.

  • எங்கள் கூட்டங்கள் நடக்கும் இடத்தை ஏன் ‘ராஜ்ய மன்றம்’ என்று சொல்கிறோம்?

  • உலகம் முழுவதும் ராஜ்ய மன்றங்களை எங்களால் எப்படி கட்ட முடிகிறது?