Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 5

எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?

எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?

அர்ஜென்டினா

சியர்ரா லியோன்

பெல்ஜியம்

மலேசியா

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் கிடைக்காததாலும் தேவையான ஆறுதல் கிடைக்காததாலும் நிறையப் பேர் மதக் கூட்டங்களுக்குப் போவதையே நிறுத்திவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, நாங்கள் நடத்துகிற கூட்டங்களுக்கு நீங்கள் ஏன் வர வேண்டும்? எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

அன்பும் பாசமும் காட்டுகிற ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்த கிறிஸ்தவர்கள் கடவுளை வணங்குவதற்கும் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் சபைகளுக்கு வந்தார்கள். ஒருவருக்கொருவர் அன்பாக ஆறுதலாக பேசுவதற்காகவும் கூடிவந்தார்கள். (எபிரெயர் 10:24, 25) அங்கே வந்தவர்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல் பழகினார்கள், உயிருக்கு உயிரான நண்பர்களைப் போல் இருந்தார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:3; 3 யோவான் 14) நாங்களும் அவர்களைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம். அதேபோன்ற அன்பையும் பாசத்தையும் நாங்களும் அனுபவிக்கிறோம்.

பைபிளில் இருக்கும் விஷயங்களை கடைப்பிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். பைபிள் காலங்களில் இருந்ததுபோலவே இன்றும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாரும் ஒன்றாக கூடி வருகிறோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று தகுதியுள்ள ஆண்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். (உபாகமம் 31:12; நெகேமியா 8:8) கூட்டங்களில் கேள்விகள் கேட்கும்போது, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். யெகோவாவைப் புகழ்ந்து எல்லாரும் பாடும்போது நீங்களும் சேர்ந்து பாடலாம். இப்படி, நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டலாம்.—எபிரெயர் 10:23.

கடவுள்மீது நம்பிக்கை அதிகமாகும். அப்போஸ்தலன் பவுல் ஒரு சபைக்கு இப்படி எழுதினார்: “உங்களைப் பார்ப்பதற்கு . . .  ஏங்குகிறேன். சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும் என்று ஏங்குகிறேன்.” (ரோமர் 1:11, 12) கூட்டங்களுக்கு வந்து மற்றவர்களோடு பழகும்போது கடவுள்மீது நமக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகும், எப்போதுமே கடவுளுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும்.

நீங்களும் எங்கள் கூட்டங்களுக்கு வந்து இதையெல்லாம் நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் வந்தால் நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுவோம். நாங்கள் யாரிடமும் காணிக்கை வசூல் செய்வதில்லை. அனுமதி இலவசம்!

  • யாரைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம்?

  • கூட்டத்தில் கலந்துகொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?