Skip to content

கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

நீங்கள் என்ன சொல்வீர்கள் . . .

  • வரும்

  • வராது

  • வரலாம்

கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?

‘மக்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.’—வெளிப்படுத்துதல் 21:4, புதிய உலக மொழிபெயர்ப்பு.

இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

நம்முடைய பிரச்சினைகளுக்கு கடவுள் காரணம் இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம்.—யாக்கோபு 1:13.

நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து கடவுள் மனதுருகுகிறார் என்ற ஆறுதலை அடைவோம்.—சகரியா 2:8.

எல்லா கஷ்டங்களும் கண்டிப்பாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையைப் பெறுவோம்.—சங்கீதம் 37:9-11.

கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?

நிச்சயம் நம்பலாம். இரண்டு காரணங்களுக்காக:

  • அநியாயத்தையும் கஷ்டங்களையும் கடவுள் வெறுக்கிறார். முற்காலத்தில் வாழ்ந்த தன்னுடைய உண்மை ஊழியர்கள் கொடூரமாக நடத்தப்பட்டபோது யெகோவாவுக்கு (கடவுளுடைய பெயர்) எப்படி இருந்திருக்கும்? “கொடுமைப்படுத்தப்பட்ட” ஜனங்களைப் பார்த்து அவர் மனம் வருந்தினார் என்று பைபிள் சொல்கிறது.—நியாயாதிபதிகள் 2:18.

    மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுக்கிற ஆட்களைக் கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. உதாரணமாக, “அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்” அவருக்கு அருவருப்பாக இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 6:16, 17.

  • நம் ஒவ்வொருவர்மீதும் கடவுளுக்கு அக்கறை இருக்கிறது. நாம் படுகிற “கஷ்டமும் வேதனையும்” நமக்கு நன்றாகத் தெரிவது போல, யெகோவாவுக்கும் நன்றாகத் தெரியும். 2 நாளாகமம் 6:29, 30.

    சீக்கிரத்தில், யெகோவா தன்னுடைய ஆட்சியில் நம் ஒவ்வொருவருடைய கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். (மத்தேயு 6:9, 10) ஆனால், தன்னை உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு அவர் இப்போதே ஆறுதல் தருகிறார்.—அப்போஸ்தலர் 17:27; 2 கொரிந்தியர் 1:3, 4.

சிந்தித்துப் பாருங்கள்

கடவுள் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார்?

பைபிளின் பதில்: ரோமர் 5:12; 2 பேதுரு 3:9.