Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடன் வாங்கியே ஆகனுமா?

கடன் வாங்கியே ஆகனுமா?

கடன் வாங்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும், ஆனா, அதை திருப்பி கொடுக்கிறதுதான் கஷ்டம். —ஒரு ஆப்பிரிக்க பழமொழி இந்த மாதிரி சொல்லுது.

கிழக்கு ஆப்பிரிக்கால இருக்கிற எல்லாருக்கும் இந்த பழமொழிய பத்தி நல்லா தெரியும். உலகத்தில இருக்கிற நிறைய பேர் இதே மாதிரிதான் நினைக்கிறாங்க. நீங்ககூட இதை ஒத்துக்குவீங்க. சில சமயம், கடன் வாங்குறது ஒன்னும் தப்பு இல்லையேனு நீங்க நினைக்கலாம்; ஆனா கடன் வாங்குறது சரியா? அதனால என்ன பிரச்சினை வரும்?

“கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் நட்பை முறிக்கும்”னு இன்னொரு ஆப்பிரிக்க பழமொழி சொல்லுது. கடன் வாங்குறதால நிறைய பேர் சந்தோஷத்த இழந்திருக்காங்க. வாங்கின கடனை திருப்பி கொடுக்கனும்னு நாம என்னதான் முயற்சி செஞ்சாலும், கொடுக்க முடியாம போயிடலாம். சொன்ன நேரத்துல பணத்த திருப்பி கொடுக்கலனா, பணம் கொடுத்தவர் நம்ம மேல கோவப்படலாம். அவருக்கும் நமக்கும் இருக்கிற நட்பு முறிஞ்சிடலாம். சில சமயம், அவர் குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும்கூட பிரச்சினை வந்திடலாம். அதனால அவசரப்பட்டு கடன் வாங்காதீங்க.

கடன் வாங்குறவங்கள பத்தி கடவுள் என்ன சொல்றார்? கடன் வாங்கிட்டு வேனும்னே திருப்பி கொடுக்காம இருக்கிறவங்கள கெட்டவங்கனு பைபிள்ல கடவுள் சொல்லியிருக்கார். (சங்கீதம் 37:21) “கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை”னும் பைபிள் சொல்லுது. (நீதிமொழிகள் 22:7) இதே மாதிரிதான் இன்னொரு ஆப்பிரிக்க பழமொழியும் சொல்லுது. அதோட அர்த்தம்: ‘நீங்க ஒருத்தர்கிட்ட கடன் வாங்கினா, அதை திருப்பி கொடுக்கிற வரைக்கும் அவர் சொல்ற மாதிரிதான் நடந்துக்கனும்.’

கடனை திருப்பி கொடுக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லனா நிறைய பிரச்சினை வரும். கடனுக்கு மேல கடன் சேர்ந்தா சந்தோஷத்த தொலைச்சிடுவோம், தூக்கத்த தொலைச்சிடுவோம், ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும், குடும்பத்துல பிரச்சினை வரும், கணவனும் மனைவியும் பிரிஞ்சிடலாம். அதுமட்டும் இல்ல, கடன் கொடுத்தவங்க நம்ம மேல புகார்கூட கொடுக்கலாம். அதனாலதான், “யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்கட்டும்”னு பைபிள் சொல்லுது.—ரோமர் 13:8.

கடன் வாங்கியே ஆகனுமா?

கடன் வாங்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சு பாருங்க: கடன் வாங்குறத தவிர வேற வழியே இல்லையா? கடன் வாங்குனாதான் வாழ்க்கைய ஓட்ட முடியுமா? வசதியா வாழனும்னு பேராசைப்பட்டு கடன் வாங்குறேனா? கடன் வாங்கி கஷ்டப்படுறதவிட, இருக்கிறத வெச்சு திருப்தியா வாழ்றதுதான் புத்திசாலித்தனம்.

சில சமயம், கடன் வாங்குறத தவிர வேற வழியே இல்லனு தோனும். அந்த மாதிரி சமயத்துல கடன் வாங்கினாலும் நீங்க நியாயமா நடந்துக்கனும். எப்படி நியாயமா நடந்துக்கலாம்?

முதல்ல, கடன் கொடுத்தவங்கள ஏமாத்தனும்னு நினைக்கக் கூடாது. ‘அவங்கதான் அவ்ளோ பணம் வச்சிருக்காங்களே! நாம ஏன் பணத்த திருப்பி கொடுக்கனும்’னு யோசிக்க கூடாது. இல்லாதவங்களுக்கு கொடுக்க வேண்டியது அவங்க கடமைனு நினைக்க கூடாது. பணக்காரங்கள பார்த்து பொறாமைப்பட கூடாது.—நீதிமொழிகள் 28:22.

அடுத்ததா, சொன்ன நேரத்துக்கு பணத்த திருப்பி கொடுக்கனும். எப்போ திருப்பி தரனும்னு அவர் சொல்லலனா, நீங்களே ஒரு தேதியை சொல்லுங்க. சொன்ன நேரத்தில பணத்த திருப்பி கொடுத்திடுங்க. கடன் வாங்குற விவரங்கள எல்லாம் பத்திரத்தில எழுதி வைக்கிறது நல்லது; அப்பதான் எந்த பிரச்சினையும் வராது. (எரேமியா 32:9, 10) பணத்த திருப்பி கொடுக்கும்போது நீங்களே போய் அதை கொடுங்க; அப்பதான் அவருக்கு நன்றி சொல்ல முடியும். வாங்கின பணத்த சரியா திருப்பி கொடுத்துட்டா உங்களுக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் வராது. “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்”னு இயேசு சொல்லியிருக்கார். (மத்தேயு 5:37) “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்”னு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 7:12) இயேசு சொன்ன இந்த வார்த்தைகள நாம எப்பவுமே ஞாபகம் வச்சுக்கனும்.

பைபிள் என்ன சொல்லுது?

கடன் வாங்காம இருக்க பைபிள் ஒரு ஆலோசனை சொல்லுது. “தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த ஆதாயம் தரும்”னு அது சொல்லுது. (1 தீமோத்தேயு 6:6) இருக்கிறத வெச்சு திருப்தியா வாழ்ந்தா தேவையில்லாம கடன் வாங்கி கஷ்டப்பட மாட்டோம். இப்போ இருக்கிற காலத்துல இந்த மாதிரி சிக்கனமா வாழ்றது கஷ்டம்தான். ஆனா, கடவுள்பக்தி இருந்தா நம்மால சிக்கனமா வாழ முடியும். எப்படி?

ஆசியாவுல இருக்கிற ஒரு கணவன்-மனைவியோட வாழ்க்கையில என்ன நடந்ததுனு பாருங்க. மத்தவங்க வீடு வாங்குறத பார்த்து அவங்களும் ஒரு சொந்த வீடு வாங்கனும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா, அவங்க சேர்த்து வச்சிருந்த பணம் பத்தல. அதனால, கடன் வாங்கி, பேங்கில லோன் எடுத்து ஒரு வீடு வாங்குனாங்க. போகப்போக, கடனை திருப்பி கொடுக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அதுக்காக ரொம்ப நேரம் வேலை செஞ்சாங்க. குழந்தைங்களையும் அவங்களால சரியா கவனிச்சிக்க முடியல. அந்த கணவர் இப்படி சொல்றார்: “எப்பவும் கடனை அடைக்கிறத பத்தியே யோசிச்சிட்டு இருப்பேன்; அதனால எனக்கு தூக்கமே இல்ல. என்ன செய்றதுனு தெரியாம தெணறி போயிட்டேன்.”

“பண விஷயத்துல கடவுள் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டாதான் நமக்கு நல்லது”

அதுக்கு அப்புறம் 1 தீமோத்தேயு 6:6-ஐ பத்தி அவங்க யோசிச்சு பார்த்தாங்க. வீட்டை விக்கனும்னு முடிவு பண்ணாங்க. வீட்டை வித்தும்கூட 2 வருஷத்துக்கு அப்புறம்தான் அவங்களால மொத்த கடனையும் அடைக்க முடிஞ்சுது. இதிலிருந்து ஒரு நல்ல பாடம் கத்துக்கிட்டாங்க. “பண விஷயத்துல கடவுள் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டாதான் நமக்கு நல்லது”னு சொல்றாங்க.

ஆரம்பத்தில கொடுத்திருக்கிற ஆப்பிரிக்க பழமொழியோட கருத்து எல்லாருக்கும் தெரிஞ்சாலும், நிறைய பேர் கடன் வாங்குறத நிறுத்திறதில்ல. அதனால கடன் வாங்குறதுக்கு முன்னாடி பைபிள் சொல்ற ஆலோசனைகள கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ▪ (w14-E 12/01)