Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

பறவையோட இறக்கை ஓர் அதிசயம்

பறவையோட இறக்கை ஓர் அதிசயம்

ஜெட் விமானம் பறக்கிறப்போ இறக்கையோட முனையில வேகமா சுழல் காற்று (சுழிகள்) உண்டாகுது. அதனால, விமானம் வேகமா பறக்க முடியாம போகுது, எரிபொருளும் அதிகமா செலவாகுது. அதே ஓடுதளத்துல வேற விமானம் உடனே வர முடியாது. கொஞ்ச நேரம் கழிச்சுதான் வர முடியும். ஏன்னா, முன்னாடி போன விமானத்தில இருந்து வந்த சுழல் காற்று பின்னாடி வர்ற விமானத்தையும் பாதிக்கும்.

இந்த பிரச்சனையை சமாளிக்கிறதுக்கு இன்ஜினியர்கள் வழி கண்டுபிடிச்சிருக்காங்க. என்ன வழி? கழுகு, நாரை, வல்லூறு போன்ற பறவைகள் உயரத்தில பறக்கிறப்போ அதோட இறக்கையின் முனைகள் மேல்நோக்கி வளைஞ்சிருக்கும். இப்போ, இந்த டெக்னிக்கை பயன்படுத்தி விமானத்தின் இறக்கை முனையை (winglets) உண்டாக்கியிருக்காங்க.

யோசிச்சு பாருங்க: கழுகு மாதிரி பெரிய பறவைகள் உயரத்தில பறக்கிறப்போ அதோட இறக்கை முனைகள் வளைஞ்சிருக்கும், பார்க்கிறதுக்கு கிட்டத்தட்ட செங்குத்தா இருக்கும். இப்படி வளைஞ்சிருப்பதால, இறக்கையோட நீளம் குறைவா இருந்தாலும் அந்த பறவையால ரொம்ப உயரத்தில பறக்க முடியும். கழுகோட இறக்கை முனை மாதிரியே விமானத்தின் இறக்கை முனையை இன்ஜினியர்கள் வடிவமைச்சிருக்காங்க. விமானத்தோட இறக்கை முனையை சரியான விதத்தில... அளவுல... வளைச்சிருந்தா விமானத்தால நல்லா பறக்க முடியும். இதை பரிசோதனையில கண்டுபிடிச்சிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா, 10 சதவீதம் அல்லது அதுக்கும் அதிகமா விமானத்தால ‘ஸ்மூத்’தா பறக்க முடியும். என்ன காரணம்? விமானத்தோட இறக்கையின் முனைகள்ல பெரிய சுழிகள் உண்டாகும், இந்த பெரிய சுழிகள்தான் விமானத்தோட வேகத்தை குறைக்குது. ஆனா அந்த முனைகளை வளைக்கிறதுனால பெரிய சுழிகள் சின்ன சுழிகளா மாறிடுது. அதோட, ‘சுழியில இருந்து உண்டாகிற சக்தியை பயன்படுத்தி விமானத்தை இன்னும் வேகமா செலுத்த முடியுது’னு என்ஸைக்ளோபீடியா ஆப் ஃபிளைட் சொல்லுது.

விமானத்தோட இறக்கை முனையை வளைக்கிறதுனால, நீண்ட தூரத்துக்கு பறக்க முடியும்... அதிகமான எடையை தூக்கிட்டுப் போக முடியும்... இறக்கையோட நீளத்தை குறைக்க முடியும். இதனால நிறைய விமானத்தை ‘பார்க்’ பண்ண முடியும். எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, 2010-ல உலகம் முழுசும் 760 கோடி லிட்டர் எரிபொருளை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மிச்சப்படுத்தி இருக்காங்க. அதோட, விமானத்தில இருந்து வெளிவர்ற புகையும்கூட நிறைய குறைஞ்சிருக்குனு நாசா (NASA) செய்தி அறிக்கை சொல்லுது.

நீங்க என்ன நினைக்கிறீங்க? பறவைகளோட இறக்கை முனைகள் மேல் நோக்கி வளைஞ்சிருக்கிற விதம், தானா வந்திருக்குமா? இல்ல இதை யாராவது படைச்சிருப்பாங்களா? ▪ (g15-E 02)