Skip to content

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பாருங்கள்

கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பாருங்கள்
  •   போகிற போக்கில் எல்லாவற்றையுமே பார்த்துக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால், எல்லாவற்றையும் பிளான் பண்ணிதான் செய்ய வேண்டும் என்று உங்கள் துணை நினைக்கிறார்.

  •   நீங்கள் அவ்வளவாக பேசவே மாட்டீர்கள்; ஆனால், உங்கள் துணை வாயை திறந்தால் மூடவே மாட்டார், அவரை சுற்றி எப்போதும் கலகலவென்று இருக்கும்.

 உங்களை கடுப்பேத்தும் சில குணங்கள் உங்கள் துணையிடம் இருக்கிறதா? அப்படியென்றால், அதை பற்றியே யோசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்காதீர்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை “பற்றியே பேசிக்கொண்டிருப்பவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:9.

 கடுப்பேத்தும் குணங்களால் உங்கள் உறவுக்குள் உறுத்தலும் உரசலும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த குணங்களை பாசிட்டிவ்வாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையில்

 கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பார்க்க...

 உங்கள் துணையிடம் இருக்கிற எந்த குணம் உங்களை கடுப்பேத்துகிறதோ, அந்தக் குணம் நீங்கள் ரசிக்கிற ஒரு குணத்தோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். இதை பற்றி மூன்று பேர் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்:

 “எதை செய்தாலும் என் கணவர் ரொம்ப மெதுவாகத்தான் செய்வார். எங்கேயாவது போகவேண்டும் என்றால்கூட ரொம்ப மெதுவாகத்தான் கிளம்புவார். ஆனால், இதே குணம்தான் அவரை பொறுமையாகவும் நிதானமாகவும் நடக்க வைக்கிறது. முக்கியமாக, என்னிடம் அவர் ரொம்ப பொறுமையாக இருப்பதற்கு அதுதான் காரணம். அவர் இப்படி மெதுவாக விஷயங்களை செய்வது எனக்கு கடுப்பாக இருந்தாலும் அவர் பொறுமையாக நடந்துகொள்வதை நான் ரொம்பவே ரசிக்கிறேன்.”—செல்ஸி.

 “என்னுடைய மனைவி எல்லாவற்றையும் பக்காவாக பிளான் பண்ணி செய்வாள். அதனால், எல்லாமே கரெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். இது என்னை கொஞ்சம் கடுப்பேத்தும். அதேசமயத்தில், அவள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வதால் எதையுமே தவறாக செய்துவிட மாட்டாள், எதையுமே மறந்துவிட மாட்டாள்.”—கிரிஸ்டஃபர்.

 “என் வீட்டுக்காரர் எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அது எனக்கு பயங்கர எரிச்சலாக இருக்கும். ஆனால், அவரை முதல்முதலில் பார்த்தபோது, அவர் இவ்வளவு ரிலேக்ஸாக இருந்ததுதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. ரொம்ப பிரச்சினையாக கஷ்டமாக இருக்கிற சூழ்நிலையில்கூட அவர் நிதானமாக இருப்பார். அது உண்மையிலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும்.”—டானியெல்.

 செல்ஸி, கிரிஸ்டஃபர், டானியெல் சொல்கிற மாதிரி நம்முடைய துணையிடம் இருக்கிற நல்ல குணங்களும் கடுப்பேத்தும் குணங்களும் ஏதோ ஒரு குறிப்பிட்ட குணத்தின் இரு முகங்களாக இருக்கலாம். எப்படி ஒரு காயினுக்கு இரண்டு பக்கங்கள் இருக்குமோ, அதேமாதிரி! அதனால், நமக்கு பிடித்த குணங்கள் மட்டும் அவரிடம் இருக்க வேண்டும், கடுப்பேத்தும் குணங்கள் இருக்கக்கூடாது என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

 குணங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கும் என்று நாம் பார்த்தோம். ஆனால், குறிப்பிட்ட சில குணங்களுக்கு ரசிக்கிற மாதிரி ஒரு பாசிட்டிவ்வான முகம் இருப்பதில்லை. உதாரணத்துக்கு, சிலர் ‘கோபக்காரர்களாக’ இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:22) அப்படிப்பட்ட ஒரு நபர், “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” நீக்கிப்போடுவதற்கு அவரால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும் என்றும் அது சொல்கிறது. aஎபேசியர் 4:31.

 உங்கள் துணையின் குணம் அவ்வளவு மோசமானது இல்லை, வெறுமனே உங்களை எரிச்சல் மட்டும்தான் படுத்துகிறது என்றால் பைபிள் சொல்கிற இந்த ஆலோசனையின்படி செய்யுங்கள்: “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13.

 அதுமட்டுமல்ல, உங்களை கடுப்பேத்தும் அந்த குணத்தின் இன்னொரு முகத்தையும், அதாவது அதன் நல்ல அம்சத்தையும், கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை, உங்கள் துணையை நீங்கள் முதன்முதலில் பார்த்தபோது, அந்த குணம்தான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கலாம். ஜோசஃப் என்ற ஒரு கணவர் இப்படி சொல்கிறார்: “உங்கள் துணையிடம் இருக்கிற கடுப்பேத்தும் குணங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், அது ஒரு வைரத்தின் கூர்மையான முனைகளை மட்டுமே பார்ப்பதுபோல் இருக்கும். அதன் அழகை நாம் கவனிக்காமல் போய்விடுவோம்.”

 யோசித்துப்பார்க்க சில கேள்விகள்

 முதலில், இதில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியையும் நீங்கள் தனியாக யோசித்துப்பாருங்கள். பிறகு, கணவன் மனைவியாக சேர்ந்து கலந்துபேசுங்கள்.

  •   உங்கள் துணையிடம் இருக்கிற ஏதோ ஒரு குணம், உங்கள் கல்யாண வாழ்க்கை முறிந்துபோவதற்கு காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அது எந்த குணம்?

  •   அது உண்மையிலேயே அவ்வளவு மோசமான குணமா, அல்லது வெறுமனே எரிச்சல் படுத்துகிற ஒரு குணமா?

  •   உங்களை கடுப்பேத்தும் அந்த குணத்துக்கு இன்னொரு நல்ல முகம் இருக்கிறதா? அப்படியென்றால் அது என்ன, அந்த குணத்தை நீங்கள் ஏன் ரசிக்கிறீர்கள்?