மீகா 5:1-15

5  “முற்றுகை போடப்பட்ட நகரத்தின் ஜனங்களே,உங்கள் உடலைக் கிழித்துக்கொள்கிறீர்கள்.எதிரிகள் நம்மைச் சுற்றிவளைத்துவிட்டார்கள்.+ ஒரு தடியால் இஸ்ரவேலுடைய நீதிபதியின் கன்னத்தில் அடிக்கிறார்கள்.+   எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லகேமே,+நீ யூதாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே* மிகவும் சிறியதாய் இருக்கிறாய்.ஆனாலும், இஸ்ரவேலை ஆளப்போகிற ராஜா உன்னிடமிருந்து வருவார்.+அவர் எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே, எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவருகிறார்.   பிள்ளை பெறப்போகிறவள் பிள்ளையைப் பெற்றெடுக்கும்வரைகடவுள் தன்னுடைய ஜனங்களைக் கைவிட்டுவிடுவார். ராஜாவின் சகோதரர்களில் மீதியாக இருப்பவர்கள் இஸ்ரவேலர்களிடம் திரும்புவார்கள்.   ராஜா எழுந்து, யெகோவா தரும் பலத்தோடு மந்தையை மேய்ப்பார்.+தன் கடவுளாகிய யெகோவாவின் மேன்மையான பெயரால் மந்தையை மேய்ப்பார். அப்போது, மந்தை பாதுகாப்பாக இருக்கும்.+அவருடைய பெருமை பூமியெங்கும் எட்டும்.+   அவர் சமாதானத்தைக் கொண்டுவருவார்.+ அசீரியர்கள் படையெடுத்து வந்து நம் கோட்டைகளைத் தாக்கினாலும்,+அவர்களுக்கு எதிராக நாம் ஏழு மேய்ப்பர்களை, சொல்லப்போனால் எட்டுத் தலைவர்களை, ஏற்படுத்துவோம்.   இவர்கள் அசீரியாவை வாளால் தண்டிப்பார்கள்.+நிம்ரோதுடைய தேசத்தின்+ எல்லைகளைத் தாக்குவார்கள். அசீரியர்களிடமிருந்து நம் ராஜா நம்மைப் பாதுகாப்பார்.+அவர்கள் படையெடுத்து வந்து நம் தேசத்தை நாசமாக்கினாலும் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.   மீதியிருக்கும் யாக்கோபின் வம்சத்தார் பல தேசத்து ஜனங்களின் மத்தியில் வாழ்வார்கள்.அவர்கள் யெகோவா பொழியும் பனித்துளி போல இருப்பார்கள்.புல்பூண்டின் மேல் பெய்யும் மழைபோல் இருப்பார்கள்.பனியோ மழையோ எந்த மனிதனையும் சார்ந்திருப்பதில்லை,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.   மீதியிருக்கும் யாக்கோபின் வம்சத்தார் மற்ற ஜனங்களின் நடுவில் இருப்பார்கள்.பல தேசத்தார் மத்தியில் வாழ்வார்கள்.காட்டு மிருகங்களின் நடுவில் வாழும் சிங்கத்தைப் போல இருப்பார்கள்.ஆட்டு மந்தைகளுக்குள் நுழையும் இளம் சிங்கத்தைப் போல இருப்பார்கள்.அது பாய்ந்து வந்து கடித்துக் குதறும்.அப்போது, யாராலும் மந்தைகளைக் காப்பாற்ற முடியாது.   உன் எதிரிகளுக்கு எதிராக உன் கை ஓங்கும்.உன்னைப் பகைக்கிற எல்லாரும் அழிந்துபோவார்கள்.” 10  யெகோவா சொல்வது இதுதான்:“அந்த நாளில், உங்களுடைய குதிரைகளையும் ரதங்களையும் அழிப்பேன். 11  உங்கள் நகரங்களை நாசமாக்குவேன்.எல்லா கோட்டைகளையும் தரைமட்டமாக்குவேன். 12  நீங்கள் செய்கிற பில்லிசூனியங்களுக்கு முடிவுகட்டுவேன்.உங்களுடைய மந்திரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவேன்.+ 13  நீங்கள் வைத்திருக்கிற சிலைகளையும் தூண்களையும் உடைத்தெறிவேன்.உங்கள் கைகளால் செய்தவற்றை இனி நீங்கள் வணங்க மாட்டீர்கள்.+ 14  உங்களுடைய பூஜைக் கம்பங்களை* பிடுங்கி எறிவேன்.+உங்கள் நகரங்களை அழிப்பேன். 15  என் பேச்சைக் கேட்காத மற்ற தேசத்து ஜனங்களைத் தண்டிப்பேன்.கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் பழிவாங்குவேன்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “குடும்பங்களுக்குள்ளே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா