கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை எப்படி உருவானது என்பதைப் பற்றியும் அது நம்மோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகம் சொல்லும்.

வரைபடம்

இன்று பொதுவாக புனித பூமி என அழைக்கப்படும் பகுதியையும் அப்போஸ்தலன் பவுலுடைய மிஷனரி பயணங்களையும் காட்டும் வரைபடம்.

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுக்கும்போது’ நமக்கு அவருடைய துணை இருக்கும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

அதிகாரம் 1

‘புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்குங்கள்’

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி எல்லா தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு அன்றைக்கே சொன்னார். இன்று அது எப்படி நடந்துவருகிறது?

அதிகாரம் 2

நீங்கள் “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

பிரசங்க வேலையைப் படுசுறுசுறுப்பாகச் செய்ய இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களை எப்படித் தயார்படுத்தினார்?

அதிகாரம் 3

“கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்”

கிறிஸ்தவ சபை உருவாவதற்கு கடவுளுடைய சக்தி எப்படி உதவியது?

அதிகாரம் 4

“கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்”

அப்போஸ்தலர்கள் தைரியமாகச் செயலில் இறங்கினார்கள், யெகோவாவும் அவர்களை ஆசீர்வதித்தார்.

அதிகாரம் 5

நாங்கள் “கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்”

அன்று அப்போஸ்தலர்கள் காட்டின உறுதி எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது.

அதிகாரம் 6

ஸ்தேவான்—‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’

யூத நீதிமன்றத்துக்கு முன்பு ஸ்தேவான் கொடுத்த தைரியமான சாட்சியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

அதிகாரம் 7

“இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிப்பது

நல்ல செய்தியைச் சொல்வதில் பிலிப்பு நமக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்.

அதிகாரம் 8

“சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது”

தீவிரமாகத் துன்புறுத்திய சவுல் பக்திவைராக்கியமுள்ள ஒரு ஊழியராக ஆகிறார்.

அதிகாரம் 9

”கடவுள் பாரபட்சம் காட்டாதவர்”

விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

அதிகாரம் 10

“யெகோவாவின் வார்த்தை அதிகமதிகமாகப் பரவிவந்தது”

பேதுரு காப்பாற்றப்படுகிறார்; நல்ல செய்தி பரவுவதை துன்புறுத்தலால் தடுத்துநிறுத்த முடியவில்லை.

அதிகாரம் 11

‘சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிரப்பப்பட்டார்கள்’

எதிர்ப்பையும் ஆர்வம் காட்டாத மக்களையும் சமாளிக்க பவுல் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்.

அதிகாரம் 12

“யெகோவா தந்த அதிகாரத்தில் தைரியமாகப் பேசிவந்தார்கள்”

பவுலும் பர்னபாவும் மனத்தாழ்மையையும் விடாமுயற்சியையும் தைரியத்தையும் காட்டுகிறார்கள்.

அதிகாரம் 13

“பயங்கர கருத்துவேறுபாடும் விவாதமும் ஏற்பட்டது”

விருத்தசேதனத்தைப் பற்றிய விவாதம் ஆளும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.

அதிகாரம் 14

“ஒருமனதாகத் தீர்மானித்தோம்”

விருத்தசேதன பிரச்சினையில் ஆளும் குழு எப்படி ஒரு முடிவு எடுத்தது என்றும் அந்த முடிவால் சபையில் எப்படி ஒற்றுமை வந்தது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 15

‘சபைகளைப் பலப்படுத்தினார்கள்’

சபைகள் விசுவாசத்தில் பலப்பட பயணக் கண்காணிகள் உதவுகிறார்கள்.

அதிகாரம் 16

‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’

ஒரு நியமிப்பை ஏற்றுக்கொள்ளும்போதும் துன்புறுத்தலைச் சந்தோஷமாகச் சகிக்கும்போதும் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன.

அதிகாரம் 17

“வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்”

தெசலோனிக்கேயாவிலும் பெரோயாவிலும் இருந்த யூதர்களிடம் பவுல் சாட்சி கொடுக்கிறார்.

அதிகாரம் 18

கடவுளை ‘தேடி . . . கண்டுபிடிக்க வேண்டும்’

தனக்கும் மக்களுக்கும் பொதுவாக இருந்த விஷயங்களை வைத்து பேசியதால் பவுலுக்கு என்ன வாய்ப்பு கிடைத்தது?

அதிகாரம் 19

“பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே”

கொரிந்துவில் பவுல் செய்த ஊழியத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கடவுளுடைய அரசாங்கத்தை பற்றி முழுமையாக சாட்சி கொடுக்க நமக்கு எப்படி உதவும்?

அதிகாரம் 20

‘யெகோவாவின் வார்த்தை பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது’

நல்ல செய்தி பரவுவதற்கு அப்பொல்லோவும் பவுலும் எப்படி உதவினார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 21

“எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல”

பவுல் பக்திவைராக்கியமாக ஊழியம் செய்கிறார், மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார்.

அதிகாரம் 22

“யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்”

யெகோவாவுடைய விருப்பத்தைச் செய்வதில் தீர்மானமாக இருக்கும் பவுல் எருசலேமுக்குச் செல்கிறார்.

அதிகாரம் 23

“என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”

வெறித்தனமான கும்பல்களுக்கு முன்பாகவும், நியாயசங்கத்துக்கு முன்பாகவும் பவுல் சத்தியத்துக்காக வாதாடுகிறார்.

அதிகாரம் 24

“தைரியமாயிரு!”

தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்திலிருந்து பவுல் தப்பிக்கிறார், பேலிக்ஸ்முன் தன்னுடைய தரப்பில் வாதாடுகிறார்.

அதிகாரம் 25

“ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”

நல்ல செய்திக்காக வழக்காடுவதில் பவுல் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கிறார்.

அதிகாரம் 26

“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”

பவுல் கப்பல் விபத்தில் மாட்டிக்கொள்கிறார். அப்போது, அவர் பலமான விசுவாசத்தையும் மற்ற பயணிகள்மேல் அன்பையும் காட்டுகிறார்.

அதிகாரம் 27

‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’

பவுல் ரோமில் காவலில் இருந்தாலும் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்.

அதிகாரம் 28

“பூமியின் எல்லைகள் வரையிலும்...”

முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்கள் ஆரம்பித்த வேலையை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து செய்கிறார்கள்.

பட அட்டவணை

இந்தப் பிரசுரத்தில் இருக்கும் முக்கிய படங்களின் அட்டவணை.