Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்

நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்

“நீ ஏன் முன்னோர்களை வணங்க மாட்டேன்னு சொல்ற? அவங்களாலதான் நாம இன்னைக்கு உயிரோட இருக்கோம். அந்த நன்றியே உனக்கு இல்ல. காலங்காலமா இருக்கிற நம்ம சம்பிரதாயங்கள தூக்கிப்போட உனக்கு எப்படி மனசு வந்துச்சு? முன்னோர்களை வணங்குறது தப்புனா, நாம இத்தனை நாளா முட்டாள்தனமாவா வணங்கிட்டு இருந்தோம்?” இப்படி திட்டிட்டு எங்க அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா என்கிட்ட இப்படி கோபமா பேசுனதே இல்ல. பைபிள் படிப்பு வேண்டாம்னு சொல்ல மனசு இல்லாம எனக்கு பைபிள் படிப்பு எடுக்க சொல்லி சாட்சிகள்கிட்ட அம்மாதான் சொன்னாங்க. ஆனா, இப்போ ஏன் இப்படி பேசுறாங்கனு யோசிக்கிறீங்களா? நான் எப்பவும் எங்க அம்மா பேச்சை கேட்பேன். ஆனா, முன்னோர்களை வணங்குற விஷயத்துல என்னால அம்மா பேச்சை கேட்க முடியல. ஏன்னா, நான் யெகோவாவை சந்தோஷப்படுத்த ஆசைப்பட்டேன். இது எனக்கு சுலபமா இல்லை, ஆனா யெகோவா எனக்கு பலம் கொடுத்தார்.

யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்

ஜப்பான்ல இருக்கிற நிறையப் பேர் புத்த மதத்தை சேர்ந்தவங்க; நாங்களும் புத்த மதத்தை சேர்ந்தவங்கதான். சாட்சிகளோடு 2 மாசம் பைபிள் படிச்சதுக்கு அப்புறம் பைபிள் சொல்றதுதான் உண்மைனு புரிஞ்சிக்கிட்டேன். ஒரு அன்பான அப்பா இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் அவரை பத்தி நிறைய கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை எங்க அம்மாவுக்கு சொல்வேன். அவங்களும் ஆர்வமா கேட்பாங்க. நான் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு போக ஆரம்பிச்சேன். பைபிளை படிக்க படிக்க புத்த மத சடங்குகள் எல்லாம் தப்புனு தெரிஞ்சிக்கிட்டேன். அதை எதையும் இனிமே செய்ய மாட்டேன்னு எங்க அம்மாகிட்ட சொன்னேன். “முன்னோர்கள் மேல அன்பு இல்லாத ஒருத்தி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்”னு சொன்னாங்க. அதுமட்டும் இல்ல, நான் பைபிளை படிக்கக் கூடாது, கூட்டங்களுக்கு போகக் கூடாதுனும் சொன்னாங்க. அம்மா அப்படி சொல்வாங்கனு நான் நினைச்சுக்கூட பார்க்கல!

அப்பாவும் அம்மாவோடு சேர்ந்துகிட்டார். அப்பா-அம்மாவுக்கு கீழ்ப்படியணும்னு யெகோவா எதிர்பார்க்கிறதை எபேசியர் 6-வது அதிகாரத்தில இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க சொல்றதை நான் கேட்டா நான் சொல்றதையும் அவங்க கேட்பாங்கனு நினைச்சேன்; மறுபடியும் குடும்பத்தில சமாதானம் இருக்கும்னு நினைச்சேன். அப்போ, பரீட்சைக்கு வேற படிக்க வேண்டியிருந்தது. அதனால 3 மாசத்துக்கு கூட்டங்களுக்கு போக மாட்டேன்னு அப்பா-அம்மாகிட்ட சொன்னேன். 3 மாசத்துக்கு அப்புறம் கண்டிப்பா கூட்டங்களுக்கு வருவேன்னு யெகோவாவுக்கு வாக்குக் கொடுத்தேன்.

நான் எடுத்த முடிவு தப்புனு அப்புறம்தான் தெரிஞ்சது. ஏன்னா, 3 மாசத்துக்குள்ள யெகோவா மேல எனக்கு இருந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது. அதுமட்டுமில்ல, நான் யெகோவாவை வணங்குறதை தடுக்க என் அப்பா-அம்மா முன்னாடி இருந்ததைவிட நிறைய பிரச்சினைகளை கொடுத்தாங்க.

எதிர்ப்புகள் வந்தாலும் உதவி கிடைச்சுது

என்னைப் போல எதிர்ப்பை சந்திச்ச நிறையப் பேர் ராஜ்ய மன்றத்தில இருந்தாங்க. யெகோவா எனக்கு நிச்சயம் உதவி செய்வார்னு அவங்க சொன்னாங்க. (மத். 10:34-37) நான் யெகோவாவுக்கு உண்மையா இருந்தா என் குடும்பத்தில இருக்கிறவங்களும் யெகோவாவை பத்தி தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க. நான் யெகோவாவையே முழுசா நம்பியிருக்க ஆசைப்பட்டேன்; அதனால, அவர்கிட்ட உருக்கமா ஜெபம் செஞ்சேன்.

அப்பா-அம்மா நிறைய விதத்தில என்னை எதிர்த்தாங்க. நான் பைபிள் படிக்கக் கூடாதுனு என் அம்மா கெஞ்சுவாங்க; சில நேரங்கள்ல பொறுமையா எடுத்து சொல்வாங்க. அவங்க பேசுறப்போ நான் நிறைய நேரங்கள்ல அமைதியாவே இருந்திடுவேன். நான் பேசுனாலே அது வாக்குவாதத்திலதான் போய் முடியும். ஏன்னா, நாங்க ரெண்டு பேருமே அவங்க அவங்க சொல்றதுதான் சரினு நிரூபிக்க பார்ப்போம். எங்க அம்மாவோட உணர்ச்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இன்னும் அதிகமா மரியாதை கொடுத்திருக்கணும்னு இப்போ நினைக்கிறேன். ஒருவேளை அப்படி செஞ்சிருந்தா வாக்குவாதமே வந்திருக்காது. நான் வீட்டைவிட்டு போகக் கூடாதுனு எங்க அப்பா-அம்மா எனக்கு நிறைய வேலை கொடுப்பாங்க. இல்லனா என்னை வீட்டுக்கு வெளியில விட்டு பூட்டிடுவாங்க. சில நேரத்தில எனக்கு சாப்பாடுகூட வைக்க மாட்டாங்க.

மத்தவங்க மூலமா என் மனசை எப்படியாவது மாத்தலாம்னு அம்மா நினைச்சாங்க. என் டீச்சர்கிட்ட இதை பத்தி பேசுனாங்க; ஆனா, என் டீச்சர் யாருக்கும் சாதகமா பேசல. மதங்களால எந்த பிரயோஜனமும் இல்லன்னு என்னை நம்ப வைக்கிறதுக்காக எங்க அம்மா அவங்க மேனேஜர்கிட்ட என்னை கூட்டிட்டு போனாங்க. என் மனசை மாத்த சொல்லி எங்க சொந்தக்காரங்ககிட்டயும் போன் பண்ணி அழுதாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, இப்படி செய்றது மூலமா என் அம்மாவே யெகோவாவை பத்தி சாட்சி கொடுக்குறாங்கனு சபையில இருந்த மூப்பர்கள் சொன்னாங்க.

நான் மேல்படிப்பு படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போகணும்னு அப்பா-அம்மா ஆசைப்பட்டாங்க. ஆனா, நான் ஆசைப்படுறத அவங்களுக்கு புரிய வைக்க முடியல. அதனால, அதையெல்லாம் லெட்டர்ல எழுதி கொடுத்தேன். என் அப்பாவுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அவர் சொன்னார், “உன்னால ஒரு வேலையை தேடிக்க முடியும்னு நினைச்சா, அதை நாளைக்கே செய். இல்லன்னா இந்த வீட்டைவிட்டு வெளியில போயிடு.” எனக்கு உதவி செய்யுங்கனு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். அடுத்த நாள், நான் ஊழியம் செஞ்சிட்டு இருந்தப்போ 2 சகோதரிகள் அவங்க பிள்ளைங்களுக்கு என்னை டியூஷன் எடுக்க சொன்னாங்க. இது அப்பாவுக்கு பிடிக்கல அதனால என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டார். அவருக்கு என் மேல கொஞ்சம்கூட அக்கறையே இல்லாம போயிடுச்சு. ‘நீ ஒரு யெகோவாவின் சாட்சியா இருக்கிறதவிட ஒரு குற்றவாளியா இருக்கலாம்’னு என் அம்மா சொன்னாங்க.

சரியா யோசிக்க யெகோவா உதவி செஞ்சார்; அடுத்து என்ன செய்யணும்னு புரியவைச்சார்

அப்பா-அம்மா பேச்சை நான் கேட்காம இருக்கிறது யெகோவாவுக்கு பிடிக்குமானு யோசிச்சேன். யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். அவரோட அன்பை பத்தி ஆழமா யோசிச்சு பார்த்ததால அப்பா-அம்மா ஏன் என்னை எதிர்க்கிறாங்கனு புரிஞ்சுக்க முடிஞ்சது. என் மேல இருந்த அக்கறையினாலதான் அவங்க அப்படி நடந்துகிட்டாங்கனு தெரிஞ்சிக்கிட்டேன். நான் சரியா யோசிக்கிறதுக்கு யெகோவா உதவி செஞ்சார்; அடுத்து என்ன செய்யணும்னு புரிய வைச்சார். அதுக்கு அப்புறம் நான் நிறைய ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். அதனால ஒரு பயனியரா ஆகணும்னு ஆசை வந்தது.

பயனியரா சேவை செஞ்சேன்

பயனியர் ஆகணுங்கிற என் ஆசையை கேள்விப்பட்ட சில சகோதரிகள், ‘அப்பா-அம்மா உன்கிட்ட சமாதானம் ஆகுற வரைக்கும் பொறுமையா இரு, அதுக்கு அப்புறம் பயனியர் செய்’னு சொன்னாங்க. நான் சரியான தீர்மானம் எடுக்க யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். நான் ஏன் ஒரு பயனியரா ஆக ஆசைப்படுறேன்னு யோசிச்சு பார்த்தேன். இதை பத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சேன்; அனுபவமுள்ள சகோதர சகோதரிகள்கிட்டயும் பேசுனேன். அதுக்கு அப்புறம், யெகோவாவை சந்தோஷப்படுத்தணும்னு முடிவு செஞ்சேன். பயனியர் ஊழியத்தை கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஆரம்பிச்சாகூட என் அப்பா-அம்மா மனசு மாறுவாங்கனு எனக்கு நம்பிக்கை இல்ல.

ஸ்கூல் படிச்சிட்டு இருந்த கடைசி வருஷத்தில நான் பயனியர் செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் பயனியர் செஞ்சதுக்கு அப்புறம் தேவை அதிகம் இருக்கிற இடத்துக்கு போய் சேவை செய்ய ஆசைப்பட்டேன். ஆனா, நான் வீட்டை விட்டு போறது என் அப்பா-அம்மாவுக்கு பிடிக்கல. அதனால, எனக்கு 20 வயசு ஆகுற வரைக்கும் காத்துட்டு இருந்தேன். தென்-ஜப்பான்ல என் சொந்தக்காரங்க இருந்தாங்க. அதனால, அந்த இடத்தில என்னை அனுப்பும்படி கிளை அலுவலகத்தை கேட்டேன். ஏன்னா, அங்க நியமிப்பு கிடைச்சா எங்க அம்மா என்னை பயப்படாம அனுப்புவாங்க.

நான் அங்க ஊழியம் செஞ்சிட்டு இருந்தப்போ என்கிட்ட பைபிள் படிச்ச நிறையப் பேர் ஞானஸ்நானம் எடுத்தாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்னும் நல்லா ஊழியம் செய்றதுக்காக நான் ஆங்கிலம் கத்துக்கிட்டேன். என் சபையில 2 சகோதரர்கள் விசேஷ பயனியர்களா இருந்தாங்க. அவங்க ஆர்வமா ஊழியம் செஞ்சதையும் மத்தவங்களுக்கு உதவி செஞ்சதையும் பார்த்து, நானும் ஒரு விசேஷ பயனியரா ஆகணும்னு ஆசைப்பட்டேன். என் அம்மாவுக்கு 2 தடவை உடம்பு முடியாம போயிடுச்சு. 2 தடவையும் அவங்களை கவனிச்சிக்கிறதுக்காக வீட்டுக்கு போனேன். அது அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதோட, அவங்களுக்கு என்மேல இருந்த கோபமும் கொஞ்சம் குறைஞ்சது.

எனக்கு நிறைய ஆசீர்வாதம் கிடைச்சுது

என் சபையில இதுக்கு முன்னாடி இருந்த ஒரு விசேஷ பயனியர் ஏழு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு ஒரு கடிதம் எழுதுனார். அவர் பெயர் ஆட்சுஷி. அவர் என்னை கல்யாணம் செய்ய விரும்புறதா சொன்னார். அதை பத்தி நான் என்னை நினைக்கிறேன்னு கேட்டு அந்த கடிதத்தில எழுதியிருந்தார். இதுக்கு முன்னாடி, அவரை கல்யாணம் செய்யணுங்கிற ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்ல. அவருக்கும் அந்த மாதிரியான ஆசையெல்லாம் இல்லனு நான் நினைச்சேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் அவருக்கு பதில் அனுப்புனேன்; ஒருத்தர பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சுக்கணும்னு சொன்னேன். எனக்கும் அவருக்கும் யெகோவாவுடைய சேவையில ஒரே மாதிரியான லட்சியம் இருந்ததுனு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். தொடர்ந்து முழுநேர சேவை செய்யணும்னு நாங்க ஆசைப்பட்டோம். எந்த நியமிப்பு கிடைச்சாலும் அதை செய்ய தயாரா இருந்தோம். அப்புறம், நாங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். என்னோட கல்யாணத்துக்கு என் அப்பா-அம்மா, என் சொந்தக்காரங்க எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

நேப்பாள்

நாங்க ஒழுங்கான பயனியர்களா சேவை செஞ்சிட்டு இருந்த கொஞ்ச நாள்லயே அவர் துணை வட்டாரக் கண்காணியா நியமிக்கப்பட்டார். அப்புறம் நாங்க விசேஷ பயனியர்களா நியமிக்கபட்டோம். அதுக்கு அப்புறம் வட்டார கண்காணியா சேவை செய்ற வாய்ப்பு அவருக்கு கிடைச்சுது. எங்க வட்டாரத்தில இருந்த எல்லா சபைகளையும் ஒரு முறை சந்திச்ச பிறகு கிளை அலுவலகத்தில இருந்து ஒரு போன் வந்தது. நேப்பாளுக்கு போய் தொடர்ந்து வட்டார வேலை செய்ய முடியுமானு கேட்டாங்க.

பல நாடுகள்ல சேவை செஞ்சதுனால யெகோவாவை பத்தி நிறைய கத்துக்கிட்டேன்

நான் அவ்ளோ தூரம் போறதை பத்தி என் அப்பா-அம்மா என்ன சொல்வாங்கனு யோசிச்சேன். இந்த விஷயத்தை அவங்ககிட்ட சொன்னப்போ, “நீ போற இடம் ரொம்ப நல்லா இருக்கும்”னு என் அப்பா சொன்னார். ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் என் அப்பாவோட நண்பர் ஒருத்தர் நேப்பாளை பத்தி அவருக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கார். சுத்தி பார்க்க நேப்பாள் ரொம்ப நல்லா இருக்கும்னு என் அப்பாகூட யோசிச்சு பார்த்திருக்கார்.

நேப்பாள்ல இருந்த மக்கள் ரொம்ப பாசமா பழகுனது எங்களுக்கு பிடிச்சிருந்தது. நேப்பாள் மட்டுமில்ல, பங்களாதேஷ்ல இருந்த சபைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அது நேப்பாளுக்கு பக்கத்தில இருந்தாலும் ரொம்ப வித்தியாசமா இருந்தது. நாங்க வித்தியாசமான விதங்கள்ல ஊழியம் செஞ்சோம். 5 வருஷத்துக்கு அப்புறம் நாங்க திரும்பவும் ஜப்பான்ல வட்டார வேலை செய்ய நியமிக்கப்பட்டோம். இப்போ இங்க சந்தோஷமா சேவை செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

ஜப்பான், நேப்பாள், பங்களாதேஷ்ல எல்லாம் சேவை செஞ்சதுல இருந்து யெகோவாவை பத்தி நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாட்டுலயும் வித்தியாசமான கலாச்சாரமும் பழக்கவழக்கமும் இருக்கு. மக்கள் ஒவ்வொருத்தரும் வித்தியாசமா இருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தர் மேலயும் யெகோவா எவ்ளோ அக்கறை வைச்சிருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க எல்லாரையும் அவர் ஏத்துக்கிறார்... அவங்களுக்கு உதவி செய்றார்... அவங்களை ஆசீர்வதிக்கிறார்னு புரிஞ்சிக்கிட்டேன்.

யெகோவாவுக்கு நன்றி சொல்ல எனக்கு நிறைய காரணம் இருக்கு. அவரை பத்தி தெரிஞ்சிக்கவும் அவருக்கு சேவை செய்யவும் அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். நல்ல கணவரை கொடுத்திருக்கார்; சரியான தீர்மானங்கள் எடுக்கவும் உதவி செஞ்சிருக்கார். இப்போ, யெகோவாவோட நல்ல நண்பரா இருக்கேன். என் குடும்பத்தில இருக்கிறவங்ககிட்டயும் சமாதானமா இருக்கேன். யெகோவாவோட உதவியாலதான் நானும் என் அம்மாவும் மறுபடியும் நல்ல நண்பர்களா ஆனோம். இதுக்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்றேன்.

வட்டார சேவையை நாங்க ரொம்ப சந்தோஷமா செய்றோம்