Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

யோசுவா 6:10-15, 20 சொல்கிறபடி இஸ்ரவேல் படை வீரர்கள் எரிகோ நகரத்தை தினமும் ஒரு முறை 6 நாட்களுக்குச் சுற்றி வந்தார்கள். 7-வது நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள். பிறகு, எரிகோவின் பலமான சுவர்களை கடவுள் விழ வைத்தார்; உடனே, இஸ்ரவேலர்கள் எரிகோவைக் கைப்பற்றினார்கள். பைபிள் சொல்வதுபோல் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பதை நிரூபிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்து இருக்கிறார்கள்?

பைபிள் காலங்களில் எதிரிகள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முற்றுகை போடுவார்கள். அந்த நகரம் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்பட்டிருந்தால் அங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சேமித்து வைத்த உணவைச் சாப்பிடுவார்கள். கடைசியில் எதிரிகள் அந்த நகரத்தைக் கைப்பற்றும்போது அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், மீதியிருக்கும் உணவு உட்பட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவார்கள். பாலஸ்தீனாவில் இருந்த நகரங்கள் இதுபோல் கைப்பற்றப்பட்டபோது அங்கிருந்த இடிபாடுகளில் கொஞ்சம் உணவு மட்டும் இருந்ததை அல்லது உணவே இல்லாமல் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எரிகோவின் இடிபாடுகளில் அப்படி இல்லை. பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ இப்படிச் சொல்கிறது: ‘அந்த நகரம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிறைய மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு, நிறைய தானியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தளவு அதிகமான தானியங்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம்!’

இஸ்ரவேலர்கள் எரிகோவிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று யெகோவா கட்டளையிட்டிருந்ததால் அவர்கள் அங்கிருந்து எந்த உணவையும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று பைபிள் சொல்கிறது. (யோசு. 6:17, 18) எரிகோவில் நிறைய தானியங்கள் இருந்த காலத்தில்தான், அதாவது அறுவடை காலத்துக்குப் பிறகு அந்த வருஷத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான், இஸ்ரவேலர்கள் எரிகோவைத் தாக்கினார்கள். (யோசு. 3:15-17; 5:10) எரிகோவைக் கைப்பற்றிய பிறகும் நிறைய தானியங்கள் இருந்தன. அதை வைத்துப் பார்க்கும்போது, பைபிள் சொல்கிறபடி ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது!