Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

குதிரையின் கால்கள்

குதிரையின் கால்கள்

குதிரையோட அறிவியல் பெயர் ஈகுவஸ் கபால்லஸ். குதிரைகளால ஒரு மணிநேரத்துக்கு 50 கிலோமீட்டர் வேகத்துல ஓட முடியும். இவ்வளவு வேகமா ஓடுறதுக்கு நிறைய சக்தி தேவைப்படும். ஆனா, குதிரை கொஞ்ச சக்திய வெச்சே ரொம்ப தூரம் ஓடும். இது எப்படினு தெரியுமா? அதுக்கு காரணம், குதிரையோட கால்கள்ல இருக்கிற தசைகள்.

குதிரைகளோட கால்கள்ல இருக்கிற தசை நாண்கள் (tendons) எலாஸ்டிக் அல்லது ஸ்பிரிங் மாதிரி செயல்படுது. ஒரு ஸ்பிரிங்-ஐ அழுத்தி விடும்போது அது வேகமா போற மாதிரி, குதிரையோட கால்கள் தரையில படும்போது அந்த தசை நாண்கள்ல உருவாகுற சக்தி, இன்னும் வேகமா ஓட குதிரைக்கு உதவுது.

குதிரை வேகமா ஓடும்போது அதோட கால்கள்ல அதிர்வு ஏற்படுது. அந்த அதிர்வுகள், தசை நாண்களை காயப்படுத்த வாய்ப்பு இருக்கு. ஆனா, குதிரையோட கால்கள்ல இருக்கிற தசைகள், அந்த அதிர்வுகள தாங்கிக்கிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. இந்த தசைகளும் தசை நாண்களும் அமைக்கப்பட்டிருக்கிற விதம் ரொம்ப வித்தியாசமா இருக்குனு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இதனாலதான் குதிரையால தடுமாறாம வேகமா ஓட முடியுது.

குதிரையோட கால் தசைகள் அமைக்கப்பட்டிருக்கிற மாதிரியே நாலு கால் ரோபாட்டை செய்றதுக்கு சில இன்ஜினியர்கள் முயற்சி செய்றாங்க. ஆனா, இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்பத்தை வெச்சு இந்த மாதிரி டிசைனை நாலு கால் ரோபாட்டில செய்ய முடியாதுனு மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த பையோமெமிடிக் ரோபாடிக் லெபாரட்டரி சொல்லுது.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க: குதிரையோட கால்கள்ல இருக்கிற இந்த அமைப்பு தானா வந்திருக்குமா, இல்லை யாராவது இதை படைச்சிருப்பாங்களா? ▪ (g14-E 10)