Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 2 2020 | கண்ணீர் நிறைந்த வாழ்க்கை​—⁠ஏன்?

புயல்போன்ற பிரச்சினைகள், ஏதோவொரு கட்டத்தில் எல்லாருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போடுகின்றன. நோயினாலோ, விபத்தினாலோ, இயற்கை பேரழிவினாலோ, வன்முறையினாலோ ஒருவேளை நாம் பாதிக்கப்படலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று மக்கள் யோசிக்கிறார்கள்.

  • கஷ்டங்களை எல்லாம் நம்மால் தவிர்க்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது, அவற்றுக்கெல்லாம் தலைவிதியை காரணம் காட்டுகிறார்கள்.

  • வேறு சிலர், இந்த ஜென்மத்தில் அல்லது போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் நாம் கஷ்டப்படுவதற்கு காரணம் என்று நம்புகிறார்கள்.

இடிபோல் தாக்கும் பிரச்சினைகளால் மக்கள் மனதில் நிறைய கேள்விகள் எழும்புகின்றன.

சிலர் என்ன நம்புகிறார்கள்?

கஷ்டங்களுக்கான காரணத்தைப் பற்றி ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கையும் என்னவென்று பாருங்கள்.

1 கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

கடவுளைத் தவறாகச் சித்தரிக்கும் போதனைகளால் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், எது உண்மை?

2 நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு நாம்தான் காரணமா?

பதில் ஆம் என்றால், நம் கஷ்டங்களை நம்மால் குறைக்க முடியும் என்று அர்த்தம்.

3 நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

இதற்கான பதில் பைபிளில் இருக்கிறது.

4 கஷ்டப்பட வேண்டும் என்றுதான் கடவுள் நம்மை படைத்தாரா?

கொள்ளை அழகோடு எல்லா விஷயங்களையும் படைத்த கடவுள், நமக்குக் கஷ்டம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்திருப்பாரா? இல்லையென்றால், நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?

5 கஷ்டங்கள் என்றைக்காவது தீருமா?

கஷ்டங்களைக் கடவுள் எப்படி நீக்குவார் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது.

உதவி இருக்கிறது!

பிரச்சினைகள் மலைபோல தோன்றினாலும் நமக்கு உதவி செய்ய நம்பகமான ஒரு வழிகாட்டி இருக்கிறது.