Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பழங்கால பாபிலோனின் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் செங்கல் செய்யும் முறைகளும் பைபிளில் சொல்லியிருப்பது உண்மை என்பதை எப்படிக் காட்டுகிறது?

பழங்கால பாபிலோனை கட்ட பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான சுட்ட செங்கல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த செங்கல்களை தயாரிக்கிற சூளைகள், “ஊருக்கு வெளியே இருந்தது. அங்கே நல்ல களிமண் கிடைத்தது. அந்த சூளைக்குத் தேவையான எரிபொருளும் . . . தாராளமாக கிடைத்தது” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கோல்தவே சொல்கிறார்.

பாபிலோன் அதிகாரிகள் இந்த சூளைகளை ஒரு கொடூரமான விஷயத்துக்காகவும் பயன்படுத்தினார்கள் என்று பழங்கால பதிவுகள் காட்டுகின்றன. “ராஜாவுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்களையும் புனிதமான விஷயங்களை அவமதித்தவர்களையும் சூளையில் போட்டு எரிக்க வேண்டும் என்று ராஜா உத்தரவு கொடுத்ததாக பாபிலோனின் பதிவுகள் காட்டுகிறது” என்று டோரான்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பால்-ஆலென் போல்யூ சொல்கிறார். இவர் பழங்கால அசீரியாவின் சரித்திரத்தையும் மொழியையும் ஆராய்ச்சி செய்கிற வல்லுநர். நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்தை சேர்ந்த ஒரு எழுத்துப் பதிவு இப்படிச் சொல்கிறது: “அவர்களை அழித்துப் போடுங்கள், எரித்து போடுங்கள், நெருப்பில் சுடுங்கள் . . . சமையல்காரனின் அடுப்புக்கு கொண்டுப்போங்கள் . . . அவர்களை எரித்து புகை எழும்பச் செய்யுங்கள், கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவர்கள் எரிந்து சாம்பலாகட்டும்.”

இது உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? பைபிளைப் படிக்கும் ஒருவருக்கு, தானியேல் 3-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களை இது ஞாபகப்படுத்தும். அந்த பதிவின்படி, பாபிலோன் நகரத்துக்கு வெளியில் இருக்கிற தூரா சமவெளியில் நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு பெரிய தங்கச் சிலையை நிறுத்தினார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று இளம் எபிரெய ஆண்கள் அந்தச் சிலையை வணங்க மறுத்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த நேபுகாத்நேச்சார் ராஜா, “வழக்கத்தைவிட ஏழு மடங்கு அதிகமாகச் சூளையைச் சூடாக்கும்படி” சொன்னார். பின்பு ராஜாவுடைய கட்டளைப்படி, அந்த மூன்று பேரும் “எரிகிற நெருப்புச் சூளையில் வீசப்பட்டார்கள்.” ஒரு சக்தி வாய்ந்த தேவதூதர் அவர்களை சாவில் இருந்து காப்பாற்றினார்.—தானி. 3:1-6, 19-28.

© The Trustees of the British Museum. Licensed under CC BY-NC-SA 4.0. Source

நேபுகாத்நேச்சாரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு சுட்ட செங்கல்

பைபிளில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் உண்மை என்பதை பாபிலோனில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களும் காட்டுகின்றன. இதில் நிறைய செங்கல்களில், ராஜாவை புகழும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்றில் இப்படி இருக்கிறது: “நேபுகாத்நேச்சார், பாபிலோனின் ராஜா . . . இந்த அரண்மனை, மகா ராஜாவான நான் கட்டியது . . . என் வம்சத்தில் வருகிறவர்கள் என்றென்றும் இதில் ஆட்சி செய்யட்டும்.” இந்த வார்த்தைகளும் தானியேல் 4:30-ல் இருக்கிற வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறது. அதில் நேபுகாத்நேச்சார் இப்படி பெருமையாக சொல்கிறார்: “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும் என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!”