Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

அவர்கள் ”விலை உயர்ந்த முத்தை” கண்டுபிடித்தார்கள்!

அவர்கள் ”விலை உயர்ந்த முத்தை” கண்டுபிடித்தார்கள்!

 மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய அரசாங்கம் சரிசெய்யும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகள் எவ்வளவு மதிப்புள்ளது என்பதை புரிந்துகொள்ள மத்தேயு 13:44-46-ல் இயேசு இந்த இரண்டு உதாரணங்களை சொன்னார்:

  •   நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஒரு மனிதன் எதேச்சையாக ஒரு பொக்கிஷத்தை கண்டுபிடிக்கிறான்.

  •   அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரி, விலை உயர்ந்த ஒரு முத்தை கண்டுபிடிக்கிறான்.

 இந்த இரண்டு பேருமே அவர்கள் கண்டுபிடித்த பொக்கிஷத்தை வாங்குவதற்காக அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் சந்தோஷமாக விற்றார்கள். இவர்களைப் போலவே இன்றும் கடவுளுடைய அரசாங்கத்தை பொக்கிஷமாய் நினைக்கிற மக்கள், அதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்க பெரிய பெரிய தியாகங்களை செய்கிறார்கள். (லூக்கா 18:29, 30) இயேசு சொன்ன உதாரணத்தில் உள்ள மனிதர்களைப் போலவே செய்த இரண்டு பேரைப் பற்றி இந்த வீடியோவில் பாருங்கள்.