Skip to content

சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?

சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?

 இல்லை. எங்கள் அமைப்பு, குறிப்பிட்ட சில திரைப்படங்களையோ புத்தகங்களையோ பாடல்களையோ தவிர்க்க வேண்டுமென்று அதன் அங்கத்தினர்களுக்குச் சட்டம் போடுவதில்லை. ஏன் தெரியுமா?

  சரி எது, தவறு எது என்று முடிவு செய்ய ஒவ்வொருவரும் தங்கள் “பகுத்தறியும் திறன்களை” பயிற்றுவிக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 5:14.

  பைபிளில் இருக்கும் சில அடிப்படையான அறிவுரைகளை மனதில் வைத்து கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க முடியும். a மற்ற விஷயங்களைப் போலவே இந்த விஷயத்திலும், கடவுளுக்கு ‘எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்வதே’ எங்களுடைய குறிக்கோள்.—எபேசியர் 5:10.

  குடும்பத்தில் இருக்கிறவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று சொல்ல குடும்பத் தலைவர்களுக்கு ஓரளவு அதிகாரம் இருப்பதாக பைபிள் சொல்கிறது. அதனால், சில வகையான பொழுதுபோக்குகளைத் தவிர்க்க வேண்டுமென்று அவர்கள் தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்குச் சொல்லலாம். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 6:1-4) ஆனால், குடும்பத்தில் இல்லாத மற்ற யெகோவாவின் சாட்சிகளிடம் குறிப்பிட்ட சில திரைப்படங்களையோ புத்தகங்களையோ பாடல்களையோ தவிர்க்கும்படி சொல்ல யாருக்குமே அதிகாரம் இல்லை.—கலாத்தியர் 6:5.

a உதாரணத்துக்கு, ஆவியுலகத் தொடர்பையும் பாலியல் முறைகேட்டையும் வன்முறையையும் தூண்டுகிற எல்லாவற்றையும் பைபிள் கண்டனம் செய்கிறது.—உபாகமம் 18:10-13; எபேசியர் 5:3; கொலோசெயர் 3:8.