Skip to content

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?

 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சின்னக் குழு, உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள்தான் ஆளும் குழு. அவர்கள் இரண்டு விதமான வேலையைச் செய்கிறார்கள்:

 முதல் நூற்றாண்டில் ‘எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்,’ எல்லா இடங்களிலும் இருந்த சபைகளின் சார்பாக முக்கியமான முடிவுகளை எடுத்தார்கள். (அப்போஸ்தலர் 15:2) இன்று இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவும் அதைத்தான் செய்கிறார்கள். இவர்கள் எங்களுடைய அமைப்பின் தலைவர்கள் கிடையாது. இயேசு கிறிஸ்துவைத்தான் சபையின் தலைவராக யெகோவா தேவன் நியமித்திருக்கிறார் என்பதை இவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். பைபிளின் அடிப்படையில்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23.

ஆளும் குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

 அமெரிக்காவில் நியு யார்க்கில் இருக்கும் வார்விக்கில் எங்களுடைய உலகத் தலைமை அலுவலகம் இருக்கிறது. அங்கேதான் ஆளும் குழுவின் உறுப்பினர்கள் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள்: கென்னத் குக், கேஜ் ஃப்லீகல், சாம்யெல் ஹெர்ட், ஜெஃப்ரி ஜாக்சன், ஸ்டீஃபன் லெட், கெரட் லாஷ், மார்க் சான்டர்சன், டேவிட் ஸ்ப்லேன், ஜெஃப்ரி வின்டர்.

ஆளும் குழு எப்படி செயல்படுகிறது?

 ஆளும் குழுவின் கீழ் ஆறு குழுக்கள் செயல்படுகின்றன. இந்த ஒவ்வொரு குழுவிலும், ஆளும் குழு உறுப்பினர்களில் ஒருவரோ அதற்கும் அதிகமானவர்களோ இருப்பார்கள்.

  •   ஒருங்கிணைப்பாளர்களின் குழு: சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்தக் குழு மேற்பார்வை செய்கிறது. அதோடு, பேரழிவுகளையோ, துன்புறுத்தலையோ, மற்ற நெருக்கடிகளையோ சந்திக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்தக் குழு உதவி செய்கிறது.

  •   ஊழியர்களின் குழு: பெத்தேல் குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை இந்தக் குழு கவனித்துக்கொள்கிறது.

  •   பிரசுரிக்கும் குழு: பைபிள் பிரசுரங்களைத் தயாரித்து, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பும் வேலையை இந்தக் குழு மேற்பார்வை செய்கிறது. அதோடு, கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களையும், மொழிபெயர்ப்பு அலுவலகங்களையும், கிளை அலுவலகங்களையும் கட்டும் வேலையை மேற்பார்வை செய்கிறது.

  •   ஊழியக் குழு: ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ பிரசங்கிக்கும் வேலையை மேற்பார்வை செய்கிறது.—மத்தேயு 24:14.

  •   போதனாக் குழு: கூட்டங்கள், பள்ளிகள், ஆடியோ பிரசுரங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுக்குத் தேவையான தகவல்களைத் தயாரிக்கும் வேலையை மேற்பார்வை செய்கிறது.

  •   எழுத்துக் குழு: அச்சிடப்படும் பிரசுரங்களுக்கும், வெப்சைட்டுக்கும் தேவையான தகவல்களைத் தயாரிக்கும் வேலையையும், மொழிபெயர்க்கும் வேலையையும் மேற்பார்வை செய்கிறது.

 அதோடு, அமைப்பின் தேவைகளைப் பற்றிக் கலந்துபேச ஆளும் குழு உறுப்பினர்கள் வாராவாரம் கூடிவருகிறார்கள். பைபிள் அடிப்படையில் எல்லா விஷயங்களையும் கலந்துபேசுகிறார்கள். பிறகு, கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி ஒருமனதாக முடிவுகளை எடுக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 15:26.

ஆளும் குழுவின் உதவியாளர்கள் யார்?

 இவர்கள், ஆளும் குழுவுக்குக் கீழ் செயல்படும் குழுக்களுக்கு உதவி செய்யும் நம்பகமான கிறிஸ்தவர்கள். (1 கொரிந்தியர் 4:2) அவர்களுடைய திறமையையும் அனுபவத்தையும் பொறுத்து ஒவ்வொரு குழுவில் நியமிக்கப்படுகிறார்கள். அந்தக் குழுவின் வாராந்தர கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆனால், முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள், தேவையான தகவல்களையும் சேகரித்துக் கொடுக்கிறார்கள். பிறகு, குழு எடுக்கும் முடிவை செயல்படுத்துகிறார்கள், அந்த முடிவினால் ஏற்படும் விளைவுகளையும் கண்காணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்கவோ, வருடாந்தர கூட்டங்களில் அல்லது கிலியட் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில் பேச்சுகள் கொடுக்கவோ இவர்களை ஆளும் குழு நியமிக்கலாம்.

உதவியாளர்களின் பட்டியல்

குழு

பெயர்

ஒருங்கிணைப்பாளர்களின் குழு

  • ஜான் எக்ரன்

  • பால் கிலீஸ்

  • டிராய் ஸ்நைடர்

ஊழியர்களின் குழு

  • ஜெரல்டு கிரிஸல்

  • பேட்ரிக் லாப்ராங்கா

  • டானியல் மால்கன்

  • மார்க் ஸ்காட்

  • ரால்ப் வால்ஸ்

பிரசுரிக்கும் குழு

  • ராபர்ட் பட்லர்

  • ஹரல்ட் கார்கர்ன்

  • கஜஸ் கிளாக்கென்டின்

  • டொனால்ட் கார்டன்

  • ராபர்ட் லுசியோனி

  • அலெக்ஸ் ரெயின்முல்லர்

  • டேவிட் சின்க்ளேர்

ஊழியக் குழு

  • கேரி ப்ரோ

  • ஜோயெல் டெலிங்கர்

  • பெட்டி ஜார்ஜஸ்

  • ஆன்டனி க்ரிஃபென்

  • செத் ஹயாட்

  • ஜோடி ஜேட்லி

  • கிறிஸ்டபர் மேவர்

  • பால்ட்டாசர் பெர்லா

  • ஜேகப் ரும்ப்

  • ஜானத்தன் ஸ்மித்

  • வில்லியம் டர்னர்

  • லீயோன் வீவர்

போதனாக் குழு

  • மைக்கெல் பெங்க்ஸ்

  • ரொனால்ட் கர்ஸன்

  • கென்னத் ப்லோடின்

  • வில்லியம் மாலன்பான்ட்

  • மார்க் நூமேர்

  • டேவிட் ஷேபர்

எழுத்துக் குழு

  • நிக்கோலஸ் அலாடிஸ்

  • பிர் கிறிஸ்டென்சன்

  • ராபர்ட் சிரான்கோ

  • கென்னத் காட்பர்ன்

  • ஜேம்ஸ் மான்ட்ஸ்

  • ஈசாக் மரே

  • க்ளைவ் மார்டின்

  • லெனார்ட் மையர்ஸ்

  • ஜென் ஸ்மலி

  • ஹெர்மேனஸ் வான் ஸெல்ம்