Skip to content

குக்கீஸ் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய கொள்கை

குக்கீஸ் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய கொள்கை

எங்கள் வெப்சைட்டிலிருந்து நீங்கள் முழு நன்மை அடைவதற்காக குக்கீஸ் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறியளவு தகவலை நாங்கள் உங்களுடைய ஃபோன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவில் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம் அல்லது அவற்றிலிருந்து பெற வேண்டியிருக்கலாம். இந்த வெப்சைட் செயல்படுவதற்கும் இந்த வெப்சைட்டை பயனர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை எங்களுக்கு அளிப்பதற்கும் குக்கீஸ் உதவுகின்றன. எங்களுடைய வெப்சைட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் தகவல் எங்களுக்கு உதவுகிறது. எங்களுடைய வெப்சைட்டைப் பயன்படுத்துகிற ஒவ்வொரு தனிநபரின் விவரங்களையும் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக, இந்த வெப்சைட்டிலுள்ள படிவங்கள் அல்லது விண்ணப்பங்கள் மூலம் தங்களுடைய பெயர், விலாசம் போன்றவற்றை தாங்களாகவே விருப்பப்பட்டு கொடுப்பவர்களின் விவரங்களை மட்டுமே வைத்துக்கொள்கிறோம். இந்தக் கொள்கையில் “குக்கீஸ்” என்ற வார்த்தை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; அதில் லோக்கல்ஸ்டோரேஜ், வெப் பீக்கன்ஸ், பிக்செல்ஸ், ஐடென்டிபையர்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் உட்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பங்களால், உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து சில குறிப்பிட்ட தகவல்களை எங்களுக்கு கொடுக்க முடியும். உதாரணத்துக்கு, உங்களுடைய கம்ப்யூட்டர் திரையின் அளவு, ஒரு வெப் பக்கத்தை எப்போது எந்த நேரத்தில் பார்த்தீர்கள் மற்றும் நீங்கள் பார்த்த பக்கத்தின் URL போன்ற விவரங்களை தர முடியும்.

நாங்கள் சேமித்துவைக்கும் அல்லது சேகரிக்கும் எந்தவொரு தகவலையும் விற்கவோ மார்க்கெட்டிங் செய்யவோ மாட்டோம். அதேபோல், நீங்கள் இன்டர்நெட்டில் பார்த்த மற்ற பக்கங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் அந்த தகவல்களை பயன்படுத்த மாட்டோம். டார்கெட்டட் அட்வர்டைசிங்கையோ மார்க்கெட்டிங் குக்கீஸையோ நாங்கள் பயன்படுத்துவதில்லை.

குக்கீஸின் வகைகள். வித்தியாசப்பட்ட செயல்களைச் செய்யும் ஏராளமான குக்கீஸ் இருக்கின்றன. வெப்சைட்டைப் பயன்படுத்தும் அனுபவத்தை அவை மேம்படுத்துகின்றன. இந்த வெப்சைட்டை நீங்கள் முன்பு பார்த்திருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ளவும் இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தும்போது நீங்கள் விரும்பிப் பார்ப்பவற்றைப் பதிவுசெய்து வைக்கவும் இந்த குக்கீஸை நாங்கள் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியை குக்கீஸ் ஒன்றில் நாங்கள் பதிவு செய்யலாம். அப்போதுதான், இந்த வெப்சைட்டை நீங்கள் திரும்பவும் பார்க்கும்போது அதே மொழியை எங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.

இந்த வெப்சைட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள குக்கீஸை, பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டிய குக்கீஸ். எங்கள் வெப்சைட் செயல்படுவதற்கும், அதை நீங்கள் அலசிப் பார்ப்பதற்கும், அதிலிருக்கும் சில அம்சங்களைப் பயன்படுத்துவதற்கும் சில குக்கீஸ் அவசியம். வெப்சைட்டைப் பயன்படுத்தி நீங்கள் சில விஷயங்களை செய்யும்போதுதான் இந்த குக்கீஸ் உருவாகும். உதாரணத்துக்கு, ப்ரைவசி செட்டிங்கை உங்கள் விருப்பத்துக்கேற்ப செட் செய்யும்போது, உள்நுழையும்போது, ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது அல்லது ஏதாவது ஒரு சேவையை நீங்கள் பயன்படுத்த விரும்பும்போது இந்த குக்கீஸ் உருவாகும். இந்த வகையான குக்கீஸ் இல்லாமல், ஆன்லைன் மூலமாக நன்கொடைகளைக் கொடுப்பது போன்ற சில சேவைகளை அளிக்க முடியாது. வியாபாரம் செய்வதற்கு தேவையான தகவல்களையோ இன்டர்நெட்டில் எந்தெந்த வெப்சைட்டுகளை நீங்கள் அலசியிருக்கிறீர்கள் என்ற தகவல்களையோ இந்த குக்கீஸ் சேகரிப்பதில்லை.

  2. செயல்பாட்டை மேம்படுத்தும் குக்கீஸ். இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது நீங்கள் அளிக்கும் பயனர் பெயர், மொழி, இடம் போன்றவற்றை ஞாபகம் வைக்க இந்த வகையான குக்கீஸ் பயன்படுகின்றன. அதோடு, எங்களுடைய வெப்சைட்டை நீங்கள் சுலபமாகப் பயன்படுத்தவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை செய்யவும் இந்த குக்கீஸ் உதவுகின்றன.

  3. குறை மற்றும் பயன்பாட்டை கண்டறியும் குக்கீஸ். குறை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களை இவை சேகரிக்கின்றன. இந்த தகவல்களில், மக்கள் இந்த வெப்சைட்டை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் போன்ற தகவல்களும் அடங்கும். உதாரணத்துக்கு, இந்த வெப்சைட்டை அவர்கள் எத்தனை தடவை பயன்படுத்தியிருக்கிறார்கள், சராசரியாக எவ்வளவு நேரம் பயன்படுத்தியிருக்கிறார்கள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த வெப்சைட்டை மேம்படுத்துவதற்கு, அதாவது இதன் தோற்றத்தையும் செயல்பாட்டையும் நிலை தன்மையையும் மேம்படுத்துவதற்கு, மட்டுமே இந்த தகவல்களை பயன்படுத்துகிறோம்.

நம்முடைய பெரும்பாலான குக்கீஸ், முதல் தரப்பு குக்கீஸாக நம் வெப்சைட்டால் நிர்ணயிக்கப்படுகிறது. சில குக்கீஸ், மூன்றாம் தரப்பு குக்கீஸாக மற்ற வெப்சைட்டுகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்துக்காக நாங்கள் கொடுத்திருக்கும் குக்கீஸின் பட்டியலில், எவையெல்லாம் மூன்றாம் தரப்பு குக்கீஸ் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

ஐ.பி. அட்ரஸின் பயன்பாடு. ஐ.பி. அட்ரஸ் என்பது இன்டர்நெட்டில் ஒரு கருவியை அடையாளம் காட்டும் எண் குறியீடு (numeric code). இந்த வெப்சைட்டை நீங்கள் பயன்படுத்தும் முறையை அலசி ஆராய்வதற்கும்... இந்த வெப்சைட்டில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பதற்கும்... நாங்கள் உங்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்துவதற்கும்... வெப்சைட் பாதுகாப்பாக இருப்பதற்கும்... உங்களுடைய ஐ.பி. அட்ரஸும் நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரும் எங்களுக்கு உதவுகின்றன.

உங்கள் தெரிவு. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் குக்கீஸ் செட்டிங்கை மாற்றி அமைக்கலாம். அதற்கு, எங்கள் ஒவ்வொரு வெப்சைட்டுகளிலும் உள்ள (கீழே இருக்கும் பட்டியலைப் பார்க்கவும் ) பக்கத்தின் கீழே இருக்கும் “ப்ரைவசி செட்டிங்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டிய குக்கீஸுக்கு உங்கள் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், மற்ற குக்கீஸை உங்கள் கருவியில் சேமித்துவைக்க அல்லது அவற்றிலிருந்து சேகரிக்க எங்களுக்கு உங்கள் ஒப்புதல் தேவை. உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெப்சைட் செட்டிங்களை மாற்றினால், செயலில் இருக்கும் குக்கீஸ் அழிக்கப்படும் என்று நினைக்காதீர்கள். இந்த வெப்சைட்டில் இருந்து குக்கீஸை அழிக்க விரும்பினால், உங்கள் பிரவுசரின் செட்டிங் மூலம் அதை செய்யலாம். ஆனால், குக்கீஸ் இல்லாமல் எங்களுடைய வெப்சைட்டிலுள்ள எல்லா அம்சங்களையும் உங்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாது. குக்கீஸை நீக்கும் விதம் பிரவுசருக்கு பிரவுசர் வித்தியாசப்படுகிறது. இது சம்பந்தமான முழு விவரங்களையும் தெரிந்துகொள்வதற்கு உங்கள் பிரவுசரிலுள்ள Help ஆப்ஷனைப் பாருங்கள் அல்லது www.allaboutcookies.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.

பின்வரும் வெப்சைட்டுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் குக்கீஸ் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பாருங்கள்.

எங்களுடைய பல வெப்சைட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள குக்கீஸ் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களையும் பாருங்கள்.